ஆற்காடு மக்கன் பேடா

ஆற்காடு மக்கன் பேடா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்கவும். பாகு கொதித்து ஒரு கம்பிப் பதம் வரும் நேரத்தில் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை தனியே வைக்கவும்.
- 2
குலாப் ஜாமுன் மிக்ஸ் சலிச்சு கட்டி இல்லாமல் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். இதில் ரூம் டெம்பரேச்சர் இல் இருக்கும் வெண்ணெய் சேர்த்து லேசாக கலக்கவும். பிறகு பால் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து அழுத்தம் கொடுக்காமல் பிசைந்து உருட்டி வைக்கவும். இந்த மாவை மூடி போட்டு கால் மணி நேரம் வைக்கவும்.
- 3
கால் மணி நேரத்திற்குப் பிறகு இந்த மாவில் 12 உருண்டைகளாக பிடிக்கவும். நான் இங்கு பெரிய மக்கன் பேடா செய்துள்ளேன். விரும்பினால் மாவின் அளவை குறைத்துக் கொள்ளலாம். ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையில் நெய் தடவி அதில் உருட்டிக் கொள்ளவும். இதில் நடுவே ஒரு நடக்கும் ஆள்காட்டி விரல் வைத்து அழுத்தவும். அந்தப் புள்ளியில் நறுக்கிய நட்ஸ் வைத்து மூடி மீண்டும் உருட்டவும். வெடிப்பு இல்லாமல் ஒரு டீ பேடா போல வடிவத்தில் அழுத்தம் கொடுத்து தயார் செய்யவும். இவ்வாறு அனைத்தையும் தயார் செய்து வைக்கவும்.
- 4
பொறிக்க நெய் சூடு செய்யவும். இதில் ஒவ்வொரு இடமாக போட்டு தீயை குறைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பொரித்த அனைத்துக் கடைகளையும் சர்க்கரைப் பாகில் சேர்த்து ஒரு நாள் ஊற வைக்கவும்.
- 5
அவ்வளவு தான் மிகவும் சுவையான மக்கன் பேடா சுவைக்கத் தயார்.
Similar Recipes
-
-
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
-
ஆற்காடு மக்கன் பேடா(Arcot makkan peda)
#vattaram குலோப் ஜாமுன் மிக்ஸ் வைத்தே அருமையான மக்கன் பேடா செய்யலாம். மிகவும் சுவையான , ஜூசியான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். Deiva Jegan -
Makkan Peda
#vattaram #GA4 Arcot special Makkan Peda ஆற்காடு மாவட்டத்தில் மக்கன் பேடா மிகவும் பிரபலம் மக்கன் பேடா செய்வதற்கு கோவாவில் சிறிது மைதா மாவு சேர்த்து அதனுள் பொடித்த நட்ஸ் வைத்து செய்வது வழக்கம் அதை சுலபமாக நான் இங்கு உருவாக்குவதில் குலப் ஜமுன் மாவை வைத்து அதே சுவையில் தயார் செய்து வைத்துள்ளேன். இதுவும் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.இதனை வீடியோ வடிவத்தில் காண எனது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பாருங்கள் https://youtu.be/YfgiszLFAN0 BhuviKannan @ BK Vlogs -
-
-
கருப்பு அரிசி பாதாம் கீர்
கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன். நான் எப்பொழுதும் பாதாம் கீரை குளிர்ப்பெட்டியில் குளிர வைத்துதான் சாப்பிடுவேன். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #book Lakshmi Sridharan Ph D -
மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா
சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா. 5 மினி பீட்ஸா #hotel Lakshmi Sridharan Ph D -
-
பழம்பொரி
#everyday4கேரளாவில் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி பழம்பொரி ரெசிப்பியை பகிர்ந்துள்ளேன். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். சத்தான நேந்திரம் பழங்களை கொண்டு செய்யும் இந்த சிற்றுண்டி எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமானதாகும். Asma Parveen -
-
ரோஸ் மில்க்
#vattaram #week1 சென்னை மயிலாப்பூரில் மிகவும் பிரபலமான ரோஸ் மில்க் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது. Ilakyarun @homecookie -
பால் பேடா
சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
🥭🥭🥭 மாம்பழ ஸ்மூதி🥭🥭🥭
#vattaramமாம்பழம்... என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல.மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும். Ilakyarun @homecookie -
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
இனிப்பு சமோசா
#kkநாங்கள் சிறுவார்களாக இருக்கும் பொழுது அம்மா கிருஷ்ணா ஜயந்தி அன்று செய்வார்கள், குட்டி கிருஷ்ணனுக்கு பிடித்த ஸ்நாக். அம்மா கர்ஜுரிக்காய் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
மால்புவா(malpua recipe in tamil)
#cf2 தீபாவளி அன்று செய்த குலோப் ஜாமுன் ஜீரா பாகம் மீதமிருந்தது பால் மற்றும் மைதா கொண்டு இந்த மால்புவா வை தயாரித்து மீதமிருக்கும் ஜீராவில் தோய்த்தெடுத்து உள்ளேன் Viji Prem -
-
முடக்கத்தான் கீரை கூட்டு
டிரக் லோட் முடக்கத்தான் கீரை என் தோட்டத்தில். நாட்டு மருத்துவத்தில் இதற்க்கு தனி இடம். வேர் , இலை , காய் எல்லாமே நலம் தரும் மூட்டு வலிக்கு, பயத்தம் பருப்பு, கீரை, தேங்காய் பால் சேர்ந்த சத்தான சுவையான கூட்டு. உணவுடன் கீரையை எப்பொழுதும் சேர்க்கவேண்டும் #ONEPOT Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (2)