தேங்காய்ப் பால் பிரியாணி மட்டன் தாளிச்சா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு பிரியாணி இலை போட்டு நாலு பச்சை மிளகாய் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது ஒரு தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் தேங்காய் பாலை சேர்க்கவும்.தேங்காய்ப்பால் கொதி வந்தவுடன் அலசி ஊற வைத்த அரிசியை அதில் போட்டு உப்பு தேவையான அளவு சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்.இப்போது சுவையான தேங்காய் பால் பிரியாணி தயார்.கூடுதல் சுவைக்கு வறுத்த முந்திரிப்பருப்பை சேர்த்துக்கொள்ளலாம்.
- 2
ஒரு குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பு மட்டன் கால் கிலோ நல்லெண்ணெய் சேர்த்து 6லிருந்து 7 விசில் விட்டு இறக்கவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு சின்னவெங்காயம் அரைத்துக் கொள்ளவும்
- 4
பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் வேகவைத்த கறியின் எலும்பை போட்டு வதக்கவும் பின்பு அரைத்து வைத்த விழுது தக்காளி சேர்த்து வதக்கவும்.பின்பு அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மல்லித்தூள் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய காய்களை போட்டு வேகவிடவும்.மாங்காய் காய் வெந்தபிறகு போடவும்.
- 5
பிறகு அதில் பருப்பு கறி கலவையை போட்டு புளியைக் கரைத்து ஊற்றி பத்து நிமிடம் கொதி விடவும் இப்போது சுவையான மட்டன் தாளிச்சா தயார்.இதை தேங்காய் பால் சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes









கமெண்ட்