தேங்காய்ப்பால் பருப்பு பாயசம்
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து வேறு தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.
- 2
அந்த வெந்த பருப்பை கடாயில் சேர்த்து இலேசாக மசித்து விட்டு கருப்பட்டியை தூள் செய்து சேர்க்கவும்.
- 3
தேங்காயை துருவி மிக்சியில் அரைத்து கெட்டியான பால் அரை கப் மற்றும் இரண்டாவது பால் ஒரு கப் எடுக்கவும்.
- 4
பருப்பு கருப்பட்டி கலவையில் இரண்டாவது பால் சேர்த்து கிளறி கொதிக்க விடவும்.
- 5
ஏலக்காயை இடித்து சேர்த்து நெய்யில் தேங்காய் கீற்றை சிறு பல்லாக வெட்டி பொரித்து எடுக்கவும்.
- 6
கடைசியாக அடுப்பை மிதமான தீயில் வைத்த கட்டியான முதல் பாலை ஊற்றி இலேசாக கொதி வந்ததும் அடுப்பை அணைத்த பொரித்த தேங்காய் சில்லை சேர்க்கவும்.
- 7
சுவையான தேங்காய் பால் பருப்பு பாயசம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15152287









கமெண்ட் (2)