சமையல் குறிப்புகள்
- 1
மாவு செய்வதற்கு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
- 2
பிறகு அதில் உப்பு, நெய் மற்றும் வனஸ்பதி கலவையை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 3
அதனுடன் எண்ணெய் ஊற்றி சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
- 5
பிசைந்த மாவின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி வைக்கவும் மாவு காயாமல் இருப்பதற்காக. பிறகு அதை மூடி ஃப்ரிட்ஜில் வைத்து நன்றாக ஊற வைக்க வேண்டும் குறைந்தது 8 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை. (இது மிகவும் முக்கியமான ஒன்று)
- 6
12 மணி நேரம் ஊறிய மாவை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சிறிதளவு மைதா மாவு தூவி அதன் மேல் வைத்து சப்பாத்தி கட்டையை வைத்து மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும்.
- 7
பிறகு அதன் மேல் சிறிதளவு மைதா மாவு, கஸ்டர்டு பவுடர் சேர்க்கவும்.
- 8
பின் வனஸ்பதி மற்றும் நெய் கலவையை அணைத்து இடங்களிலும் தேய்த்து அதன் மேல் சர்க்கரை தூவிக் கொள்ளவும். பிறகு மாவை இரண்டாக மடித்து இதே முறையில் மீண்டும் அனைத்தையும் சேர்க்கவும்.(நன்கு மடிப்புகளுக்கும் இதே முறையை தொடரவும்)
- 9
இறுதியாக மடித்ததும் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
- 10
பிரிட்ஜில் இருந்து எடுத்த மாவின் மேல் சிறிதளவு மைதா மாவு தூவி மெல்லியதாக இல்லாமல் மாவை உருட்டவும்.
பிறகு அதை கத்தி வைத்து சதுர வடிவில் துண்டுகளாக்கவும்.
- 11
அதற்கு வடிவம் கொடுப்பதற்கு நான்கு முனைகளையும் ஒரே புள்ளியில் வைத்து அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
- 12
அனைத்தையும் இதே போல் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- 13
பிறகு தயார் செய்ததை 180 டிகிரிக்கு பத்து நிமிடம் முன்கூட்டியே சூடுபடுத்தி வைத்துள்ள ஓவனில் 45 நிமிடங்களுக்கு வைக்கவும்.(ஒவ்வொரு ஒவனுக்கும் நேரம் மாறுபடும், 40 நிமிடங்களுக்கு பிறகு சோதித்துப் பார்க்கவும்)
- 14
செக்க சிவந்து மொறுமொறுப்பான நீலகிரி ஸ்பெஷல் வர்க்கி தயார். (நன்றாக ஆற வைத்து பரிமாறவும்.)
- 15
- 16
- 17
மொரு மொறுப்பாக சிறிது இனிப்பு சுவையுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வர்க்கி இப்போது நம் வீட்டிலேயே சுலபமாக செய்து...சுவையாக சாப்பிடலாம்..
- 18
சுடசுட டீயுடன் பரிமாறினால் சுவையோ அபாரம்...😋😋😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
லேயர் பரோட்டா(layer parotta recipe in tamil)
#magazine4பரோட்டா மாவை பிசைந்து ஊறவைக்க கொஞ்சம் நேரம் பிடிக்கும் எந்த அளவுக்கு ஊற நேரம் கொடுக்கிறமோ அந்த அளவுக்கு புரோட்டா மிகவும் நன்றாக வரும் Sudharani // OS KITCHEN -
-
ஸ்ட்ராபெரி குக்கீ கேக்
#AsahiKaseiIndiaஇது 70 சதவீதம் பிஸ்கட் போலவும் 30 சதவீதம் கேக் மாதிரி சாஃப்ட் ஆகவும் இருக்கும் மிகவும் நன்றாக இருக்கும் டீ டைம் ஸ்நேக்ஸ் Sudharani // OS KITCHEN -
-
-
-
மைதா பர்பி (90's Popular Barfi) (Maida burfi recipe in tamil)
#kids290' பிரபலமாக இருந்த மைதா பர்பி யை இந்த பதிவில் காண்போம்....... karunamiracle meracil -
-
-
ஜூஸ் பரி(நெய் பிஸ்கட்) கிறிஸ்மஸ் ஸ்பெஷல் (Juice berry recipe in tamil)
#GRAND1 #week1 ஜூஸ் பரி மிகவும் சுவையாக இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர், Rajarajeswari Kaarthi -
-
-
ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (14)