தேங்காய் கோவா (cocount kova)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் என்னிடம் பாதாம் இருந்ததால் எடுத்துக் கொண்டேன் உங்களிடம் உள்ளதை எடுத்துக் கொள்ளவும் பால் தண்ணீர் விடாமல் காய்ச்சி ஆற வைத்தால் சுவையாக இருக்கும்
- 2
முதலில் 1ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளவும் அதில் தேவைக்கேற்ப பாதாமைப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பின் மிக்ஸி ஜாரில்1கப் தேங்காயை எடுத்துக் கொண்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும் தேங்காயில் உள்ள பின் பகுதியை நீக்கி விடவும் முற்றிய தேங்காயாக இருந்தால் நன்றாக இருக்கும்
- 4
அரைத்த தேங்காயை நெய்யில் ஒரு வறுப்பு வறுக்கவும் பின் 1 கப் பாலை ஊற்றிக் கொள்ளவும்
- 5
அதில்2 ஏலக்காயைச் சேர்த்துக் கொள்ளவும் பின் பால் வற்றும் அளவிற்கு விடவும்
- 6
பால் நன்றாக வற்றி வரும் தேங்காய் நன்றாக வெந்து நைசான பதத்திற்கு வரும் வாயில் வைத்த உடனே கரையும்
- 7
பின் 1/2 கப் சீனியைச் சேர்க்கவும் சீனியானது உருகும் பின் தண்ணீர்ப் பதம் போகும் வரை பொறுத்திருக்கவும்
- 8
கரண்டியால் சுற்றி விட்டால் ஒட்டாமல் வரும் இந்த நேரத்தில் தேவைப்பட்டால் நெய் சேர்க்கலாம் தேங்காய் என்பதால் நான் சேர்க்க வில்லை பின் வறுத்து எடுத்த பாதாமைச் சேர்க்கவும்
- 9
நன்றாக கிளரி விட்டு அடுப்பை விட்டு இறக்கவும்
- 10
சுவையான தேங்காய் கோவா தயார்
Keywords
Similar Recipes
More Recipes

























கமெண்ட் (2)