"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).

"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).
சமையல் குறிப்புகள்
- 1
வெஜிடேபிள் வெள்ளை குருமா தயார் செய்ய தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக்கொள்ளவும்...
வெங்காயத்தை நீளமாக நறுக்கவும், உருளைக்கிழங்கு,கேரட்,பீன்ஸ் அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்...
- 2
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு சன்பிளவர் ஆயில் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு 2பிரியாணி இலை,1டீஸ்பூன் சீரகம் போட்டு தாளிக்கவும்..
அடுத்து நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன் நிறமாகும் வரை நன்றாக வதக்கவும்..
- 3
அடுத்து 1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு,கேரட்,பீன்ஸ்&பச்சை பட்டாணியை போடவும்.
- 4
சிறிது நேரம் காய்கறிகளை நன்றாக வதக்கவும்.தேவையான அளவு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளரவும்.பிறகு சிறிது நேரம் மிதமான தீயில் மூடி வைத்து வேகவிடவும்...
- 5
1இன்ச் பட்டை,7ஏலக்காய்,2டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம்,2டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை,2டேபிள் ஸ்பூன் வெள்ளை எள் அல்லது கசகசா.
மேலே குறிப்பிட்ட அனைத்து மசாலா பொருட்களையும் குறைந்த தீயில் வைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்... - 6
அடுத்து 1தேங்காயை துருவிக் கொள்ளவும்.
வறுத்த மசாலா பொருட்கள்,துருவிய தேங்காய்,3பச்சை மிளகாய் இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று வெண்ணையாக அரைக்க வேண்டும். - 7
தேங்காய் மசாலா விழுது,2எலுமிச்சை பழம் சாறு தயார்.
தேங்காய் மசாலா விழுது சேர்த்துக் கிளரவும்.
- 8
தேவையான அளவு தண்ணீர்,2எலுமிச்சை பழம் சாறு,சிறிதளவு கருவேப்பிலை,தேவையான அளவு கொத்துமல்லித்தழைகள் சேர்த்து கொதிக்கவிடவும்.....
- 9
அடுத்து குறைந்த தீயில் மூடி வைத்து வேகவிடவும்.
"வெஜிடேபிள் வெள்ளை குருமா" தயார்.....
Keywords
Similar Recipes
More Recipes





























கமெண்ட்