கருணைக்கிழங்கு பொடிமாஸ் yam podimas recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
கருணைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு மண் இல்லாமல் நன்றாக கழுவிக் கொள்ளவும். பின்னர் கேரட் துருவதை போல் துருவிக் கொள்ளவும்.
- 2
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின் துருவிய கருணைக்கிழங்கை சேர்த்து கை விடாமல் 2நிமிடம் வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிழங்கு முருவலாக வரும் வரை கிளறவும். பின் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
- 3
கிழங்கை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். இல்லை எனில் அடி பிடிக்கும் மிகவும் குறைந்த தீயில் சமைக்கவும். தண்ணீர் சேர்க்க கூடாது. சுவை அருமையாக இருக்கும். கிழங்கு சற்று பழைய கிழங்காக இருக்க வேண்டும். எண்ணெயில் வறுப்பதால் அரிப்பு இருக்காது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15288008











கமெண்ட் (2)