வத்தல் குழம்பு (vathal kulambu recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

வத்தல் குழம்பு (vathal kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 நபர்கள்
  1. 50 கிராம்- சுண்டை காய் வற்றல்
  2. 50 கிராம் - மணத்தக்காளி வற்றல்
  3. 2- பெரிய வெங்காயம் அல்லது 20 சிறிய வெங்காயம்
  4. 2- தக்காளி
  5. 2- முழு பூண்டு
  6. 1 கொத்து - கறிவேப்பலை
  7. 1/2 தே.க - வெந்தயம்
  8. 1/4 தே.க -கடுகு,உளுந்து
  9. 50 கிராம் - புளி (நெல்லிக்காய் அளவு)
  10. 2 மேஜைக்கரண்டி- காய்ந்த மிளகாய் தூள்
  11. 1/4 தே.க - மஞ்சள் தூள்
  12. தேவையானஅளவு- உப்பு
  13. 150மில்லி- நல்லெண்ணை
  14. அரைக்க தேவையான பொருட்கள்:-
  15. 2 மேஜைக்கரண்டி -மல்லி
  16. 1 தே. க - சீரகம்
  17. 1 தே.க -உளுந்து
  18. 1 தே.க -கடலை பருப்பு
  19. 1/2 கப் - துருவிய தேங்காய்
  20. 1/2 தே.க - கசகசா
  21. 5 காய்ந்த மிளகாய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1
  2. 2

    சட்டியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன் நிறமாக வறுத்து நன்றாக ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3
  4. 4

    சட்டியில் நல்லெண்ணெயை (கூடுதல் சுவையை கொடுக்கும்) ஊற்றி காய்ந்ததும் சுண்டைக்காய் மற்றும் மணத்தக்காளி வற்றலை சேர்த்து 30 வினாடிகளுக்கு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    பிறகு சட்டியில் எண்ணெய் ஐ காய்ந்ததும் கடுகு சேர்த்து கொள்ளவும். கடுகு பொரிந்ததும் வெந்தயம் சேர்த்து சிவந்ததும் வெங்காயம் சேர்த்து கொள்ளவும். (வெங்காயம் விரைவில் வதங்குவதற்கு சிறிதளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும்)

  6. 6

    பிறகு பூண்டு கறிவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

  7. 7

    தக்காளி மைய வதங்கியதும் அதில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.

  8. 8
  9. 9

    பிறகு புளிக்கரைசல், அரைத்து வைத்த மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.

  10. 10

    தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 25 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

  11. 11
  12. 12

    நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் வறுத்து வைத்த வற்றலை சேர்த்து 5 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்து பரிமாறவும். (சிறிதளவு வற்றலை நொறுக்கிப் போட்டால் சுவை கூடுதலாக இருக்கும்- கல்யாண வீட்டு வத்தல் குழம்பு ரகசியம் இது தான்)

  13. 13
  14. 14

    சுவையான மணமணக்கும் வத்தல் குழம்பு சுவைக்க தயார்.

  15. 15
  16. 16
  17. 17
  18. 18

    சூடான சாதத்துடன் சுவைக்க சுவையோ அபாரம்...😋😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes