வத்தல் குழம்பு (vathal kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
- 2
சட்டியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன் நிறமாக வறுத்து நன்றாக ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
- 4
சட்டியில் நல்லெண்ணெயை (கூடுதல் சுவையை கொடுக்கும்) ஊற்றி காய்ந்ததும் சுண்டைக்காய் மற்றும் மணத்தக்காளி வற்றலை சேர்த்து 30 வினாடிகளுக்கு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
பிறகு சட்டியில் எண்ணெய் ஐ காய்ந்ததும் கடுகு சேர்த்து கொள்ளவும். கடுகு பொரிந்ததும் வெந்தயம் சேர்த்து சிவந்ததும் வெங்காயம் சேர்த்து கொள்ளவும். (வெங்காயம் விரைவில் வதங்குவதற்கு சிறிதளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும்)
- 6
பிறகு பூண்டு கறிவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 7
தக்காளி மைய வதங்கியதும் அதில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
- 8
- 9
பிறகு புளிக்கரைசல், அரைத்து வைத்த மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.
- 10
தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 25 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
- 11
- 12
நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் வறுத்து வைத்த வற்றலை சேர்த்து 5 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்து பரிமாறவும். (சிறிதளவு வற்றலை நொறுக்கிப் போட்டால் சுவை கூடுதலாக இருக்கும்- கல்யாண வீட்டு வத்தல் குழம்பு ரகசியம் இது தான்)
- 13
- 14
சுவையான மணமணக்கும் வத்தல் குழம்பு சுவைக்க தயார்.
- 15
- 16
- 17
- 18
சூடான சாதத்துடன் சுவைக்க சுவையோ அபாரம்...😋😋😋😋
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes



































கமெண்ட் (4)