"அரியலூர் மட்டன் கிரேவி"(Ariyalur Mutton Gravy receip in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரியலூர் மட்டன் கிரேவி செய்ய தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்....
- 2
ஒரு பிரஸ்ஸர் குக்கரில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்த பிறகு 1/2டீஸ்பூன் வெந்தயம்,2காய்ந்த உருண்டை சிவப்பு மிளகாய்,1கொத்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 3
பொடியாக நறுக்கிய 2பல்லாரி வெங்காயத்தை போட்டு பொன் நிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
பொடியாக நறுக்கிய 6தக்காளி பழத்தை போட்டு வதக்கவும்.
1ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது,1டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
- 4
1/2டீஸ்பூன் மிளகு தூள்,1டீஸ்பூன் சீரகம் தூள்,1டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2டீஸ்பூன் பட்டை,கிராம்பு,ஏலக்காய் தூள்,1ஸ்பூன் கொத்துமல்லித்தூள் போட்டு மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
- 5
மட்டன் துண்டுகளை போட்டு சிறிது நேரம் நன்றாக வதக்கவும்.4ஸ்பூன் தயிர் போட்டு பிரட்டவும்,1கப் தேங்காய் விழுதில் எடுத்த தேங்காய் பால் 1பவுள் ஊற்றவும்.
- 6
1டீஸ்பூன் கரம் மசாலா போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
- 7
பிரஸ்ஸர் குக்கரில் டயர்,வெயிட் போட்டு மூடி 5-7 விசில் விடவும்.
தேவையான அளவு கொத்தமல்லித்தழை போடவும்.
பின் திறந்து பார்த்து தேங்காய் பால் சுண்டும் வரை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்...
- 8
"அரியலூர் மட்டன் கிரேவி" தயார்....
Keywords
Similar Recipes
More Recipes

























கமெண்ட்