பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணிட்டு அதில் 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 ஸ்பூன் மல்லித்தூள்,1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள், சிறிதளவு உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறவும்.
- 2
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீர் துண்டுகளாக போட்டு பொண்ணிறமாக பொரித்தெடுக்கவும்.
- 3
பிறகு அதே கடாயில் பட்டை, கிராம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு அரைத்த தக்காளி விழுதை ஊற்றி வதக்கவும். பிறகு 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
பிறகு 1 ஸ்பூன் தயிர் ஊற்றி 1 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு பொரித்து வைத்த பன்னீர் துண்டுகளை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 6
பிறகு கிரேவி பதத்திற்கு வந்தவுடன் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி போட்டு ஒரு கிளறு கிளறவும். பிறகு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட்