சின்னவெங்காயம் பூண்டு கார குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்ன வெங்காயம் பூண்டு எல்லாத்தையும் கட் பண்ணி எடுத்துக்கொள்ளவும் பிறகு ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வெந்தயம் சோம்பு சேர்த்து தாளிக்கவும்
- 3
பிறகு கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து பூண்டு சேர்த்து வதக்கவும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வதங்கிய பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
பூண்டு சின்ன வெங்காயம் நன்றாக கிளறி 5 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக வதக்கவும் பூண்டு வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி வதங்கிய பிறகு கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 6
2 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
- 7
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் பத்து நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைக்கவும்
- 8
குழம்பு கொதித்து சின்னவெங்காயம் பூண்டு நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்த கொதி வரவும் அடுப்பை இறக்கவும்
- 9
சுவையான சின்ன வெங்காயம் பூண்டு கார குழம்பு தயார்
Keywords
Similar Recipes
More Recipes




























கமெண்ட்