அரியலூர் ஸ்பெஷல் மட்டன் குருமா

அரியலூர் ஸ்பெஷல் மட்டன் குருமா
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை நன்றாக சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் ஒரு கைப்பிடி அளவு பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுதுகள், மஞ்சள் தூள் மற்றும் எண்ணெய் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று அல்லது நான்கு விசில் வரை குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் பச்சை மிளகாய் கசகசா எல்லாவற்றையும் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும், மட்டன் நன்கு வெந்ததும் தனியாக வைத்து விட வேண்டும் ஒரு கனமான கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி மசாலாக்கள் எல்லாவற்றையும் சேர்க்கவேண்டும், கலக்கல் பொரிந்ததும் வெங்காயத்தையும் கருவேப்பிலையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்க்க வேண்டும், பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் தக்காளி நன்கு வதங்கியதும் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்
- 4
பின் மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும், வேக வைத்திருக்கும் மட்டனை அதனுடன் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும் அடுத்ததாக அரைத்து வைத்திருக்கும் தேங்காய் இதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட வேண்டும்
- 5
தண்ணீர் விட்டு ஒரு தட்டு போட்டு மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும், நன்கு கொதித்ததும் கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்துவிட வேண்டும்
- 6
சுவையான மட்டன் குருமா யார், இந்த மட்டன் குருமாவை தோசை இட்லி சப்பாத்தி, பரோட்டா, பூரி மற்றும் வெள்ளை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட்
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊