ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி

#magazine3
சுவையாக இருந்தது வித்தியாசமாகவும் ஈசியாகவும் இருந்தது குக்கரீல் வைத்ததால் நேரமும் குறைவாக இருந்தது
ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி
#magazine3
சுவையாக இருந்தது வித்தியாசமாகவும் ஈசியாகவும் இருந்தது குக்கரீல் வைத்ததால் நேரமும் குறைவாக இருந்தது
சமையல் குறிப்புகள்
- 1
கோழிக்கறியை சுத்தமாக கழுவி தயிர் மற்றும் மஞ்சள்த்தூள்ச் சேர்த்து 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்
- 2
பின் தேவையானப் பொருளை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்
- 3
நான் குக்கரீல் செய்தேன் தேவைப்பட்டால் கடாயிலும் செய்யலாம் குக்கரீல் வெறும் வறுப்பாக 5 வத்தல் மற்றும் 10 முந்திரிப்பருப்பைச் சேர்த்து வறுக்கவும்
- 4
சிறிது கருப்பாக மாறியதும் ஜாரில் போட்டு பின் நறுக்கிய 2 தக்காளியை போட்டு போஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்
- 5
பின் 100 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் 1 பட்டை, 2 ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவேண்டும்
- 6
பின் 4 கிராம்பு 2 பெரிய நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து இஞ்சிப்பூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும்
- 7
பின் உப்புச் சேர்க்கவும் வதங்கியப்பின் 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள், 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள்ச் சேர்த்து வதக்கவும்
- 8
பிறகு சிளிதளவு தண்ணீர்ச் சேர்த்து பின் 1 கி சிக்கனைச் சேர்த்துக் கொள்ளவும் சிக்கனில் தண்ணீர் விடும் வரை பொறுத்திருக்கவும்
- 9
மசாலாவில் சிக்கனை கிளரிக் கொள்ளவும் பிறகு அரைத்து வைத்த மசாலா போஸ்ட்டைச் சேர்த்து வதக்கவும் பின் கைப்பிடி அளவு புதினாவைச் சேர்க்கவும்
- 10
பிறகு மிக்றி ஜாரைக் கழுவி தண்ணீர்ச் சேர்த்து உப்புக் காரம் சரிப்பார்த்தப்பின் குக்கரை மூடி 3 விசில் வரும் வரைப் பொறுத்திருக்கவும்
- 11
விசில் வந்து ஆவி அடங்கியதும் குக்கரைத் திறக்கவும் குழம்புப் பதத்தில் இருக்கும் மீண்டும் அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்
- 12
தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி பரிமாறவும் சுவையான ஹோட்டல் முறையில் தயாரித்த சிக்கன் கிரேவி தயார் பரிமாறவும் செய்துப் பார்த்து பகிரவும்
Keywords
Similar Recipes
More Recipes




































கமெண்ட்