குக்கரீல் சிக்கன் பிரியாணி

#magazine4
எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4
எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
சிக்கனை நன்றாக கழுவி அதை 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள் 1/2 கப் தயிர் ஊற்றி ஊறவைக்கவும்
- 3
முதலில் பெரிய குக்கரை எடுத்துக் கொள்ளவும் அதில் 100ml எண்ணெய் மற்றும் 50 ml நெய்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் 2 பட்டைச் சேர்க்கவும்
- 4
பின் 1 நட்சத்திர பூ, 4 கிராம்பு, 2 பட்டைச் சேர்த்துக் கொள்ளவும்
- 5
அதோடு 2 ஏலக்காய் 1 ஸ்பூன் சோம்பு, 2 கடல்பாசிச் சேர்த்துக் கொள்ளவும்
- 6
பின் நறுக்கிய 5 வெங்காயம் 4 தக்காளிச் சேர்த்து வதக்கவும் பின் சுவைக்கேற்ப உப்புச் சேர்த்துக் கொள்ளவும்
- 7
பின் 2 ஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும் பிறகு 2 1/2 கி சிக்கனைச் சேர்த்துக் கொள்ளவும் பின் கைப்பிடி அளவு மல்லி இலையைச் சேர்த்துக் கொள்ளவும் பிறகு 1 பிரியாணிப் பொடி, 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 8
சிக்கனில் தண்ணீர் வெளியேறும் பின் 7 கப் அரிசியைச் சேர்க்கவும் பின் கைப்பிடி அளவு புதினாவைச் சேர்த்துக் கொள்ளவும்
- 9
பின் தயிர் 1/2 கப் சேர்த்துக் கொள்ளவும் பிறகு 14 கப் தண்ணீர்ச் சேர்த்துக் கொண்டு உப்புக்காரம் சரிபார்க்கவும் பின் குக்கரை மூடிக் கொண்டு 4 விசில் விடவும்
- 10
பின் ஆவிப் போனதும் இறக்கி பரிமாறவும் சுவையான குக்கரீல் சிக்கன் பிரியாணி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
































கமெண்ட் (2)