"சேமியா கேரட் பால் பாயாசம்"(Vermicelli Carrot Milk Payasam reipe in tamil)

#MysteryBoxChallenge
#npd3
#சேமியான்கேரட்பால்பாயாசம்
#குக்பேட்இந்தியா
"சேமியா கேரட் பால் பாயாசம்"(Vermicelli Carrot Milk Payasam reipe in tamil)
#MysteryBoxChallenge
#npd3
#சேமியான்கேரட்பால்பாயாசம்
#குக்பேட்இந்தியா
சமையல் குறிப்புகள்
- 1
"சேமியான் கேரட் பால் பாயாசம்" செய்ய தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
200கிராம் வறுத்த சேவொரிட் சேமியான்,1கேரட்-ஐ தோல் நீக்கி கழுவிய பிறகு கிரேட்டரில் துறுவிக் கொள்ளவும்...
- 2
எலக்ட்ரிக் அடுப்பின் மேல் ஒரு பாத்திரம் வைக்கவும்.அதில் 1/2லிட்டர் ஆரோக்யா பாக்கெட் பால்-ஐ உடைத்து ஊற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்...
- 3
கேஸ் அடுப்பின் மேல் ஒரு பாத்திரம் வைக்கவும்.அதில் 1&1/2டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும்.நெய் சூடான பிறகு துறுவிய கேரட்-ஐ போட்டு சிறிது நேரம் வதக்கிக் கொள்ளவும்...
அடுத்து வேறு பாத்திரத்தை அடுப்பின் மேல் வைக்கவும்.அதில் 200கிராம் வறுத்த சேவொரிட் சேமியான்-ஐ போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்....
- 4
அடுத்து சேமியான் வெந்த பிறகு அதில் வதக்கின துறுவிய கேரட் போட்டு கிளரவும்...
- 5
1/2லிட்டர் காய்ச்சிய பால்-ஐ சேமியான் கேரட் பால் பாயாசம் பாத்திரத்தில் ஊற்றவும்..200கிராம் சீனி போடவும்.2டீஸ்பூன் மில்க் மெய்டு ஊற்றவும்.எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக கிளரவும்.
- 6
சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை கேஸ் அடுப்பின் மேல் வைக்கவும்.1&1/2டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும்.நெய் சூடான பிறகு 1/2இன்ச் பட்டை,3ஏலக்காய்,21மஞ்சள் காய்ந்த திராட்சை போட்டு தாளிக்கவும்...
- 7
தாளித்த பொருட்களை பால் பாயாசத்தில் ஊற்றவும்.
ஒன்றாக கிளறி சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்...
- 8
"சேமியான் கேரட் பால் பாயாசம்" தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
























கமெண்ட்