Mud Pot Mushroom potato Curry

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

Mud Pot Mushroom potato Curry

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1பாக்மஷ்ரூம்
  2. 2உருளைக்கிழங்கு
  3. 4ஸ்பூன்நல்லெண்ணை
  4. 1"பட்டை
  5. சிறிதளவுபூ
  6. 1ஸ்பூன்சோம்பு
  7. சிறிதளவுகறிவேப்பிலை
  8. 10சின்னவெங்காயம்
  9. 1பெரியவெங்காயம்
  10. 11/2ஸ்பூன்இஞ்சிபூண்டுவிழுது
  11. 1தக்காளி
  12. 2ஸ்பூன்மல்லித்தூள்
  13. 1ஸ்பூன்மிளகாய்த்தூள்
  14. 1ஸ்பூன்கரம்மசாலாத்தூள்
  15. தேவையானஉப்பு
  16. 1ஸ்பூன்மிளகுத்தூள்
  17. 2ஸ்பூன்கஸுரிமேத்தி
  18. அரைக்க:-
  19. 1/4மூடிதேங்காய்
  20. 5சின்னவெங்காயம்
  21. 1ஸ்பூன்சீரகம்
  22. 1ஸ்பூன்சோம்பு
  23. 2கிராம்பு
  24. 5முந்திரிபருப்பு
  25. தேவையானதண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேங்காய்பல், சின்னவெங்காயம்,சீரகம், சோம்பு,கிராம்பு மற்றும் முந்திரிபருப்பு சிறிது தண்ணீரை சேர்த்து அரைத்து கொள்ளவும்...

  2. 2

    பின்னர் மண் சட்டியில் நல்லெண்ணை சேர்த்து காய்ந்ததும் பட்டை,பூ,சோம்பு, கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்....

  3. 3

    பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்...

  4. 4

    தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்....பின்னர் நறுக்கிய மஷ்ரூம் மற்றும் உருளைக்கிழங்கை(தோல் நீக்கி) சேர்த்து நன்கு வதக்கவும்...

  5. 5

    பின்னர் மல்லித்தூள்,மிளகாய் த்தூள்,கரம்மசாலாத்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்...தேவையான தண்ணீரை சேர்த்து மூடி வைத்து வேக விடவும்..

  6. 6

    வெந்தவுடன் இறுதியில் கஸுரி மேத்தி மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி அடுப்பை அனைக்கவும்... சுவையான mud pot mushroom potato curry தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes