ரெட் பீன்ஸ் மசாலா கிரேவி(red beans masala gravy recipe in tamil)

ரெட் பீன்ஸ் மசாலா கிரேவி(red beans masala gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயை அடுப்பில் வைத்து ஆயில் சேர்க்கவும் ஆயில் சூடானவுடன் சிறிதளவு சோம்பு பொடியாக நறுக்கிய பல்லாரி வெங்காயம் ஒன்று இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
- 2
இப்பொழுது வெங்காயமும் இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாமாக சேர்ந்து கலந்து வரும் பொழுது இரண்டு தக்காளியை மிக்ஸியில் போட்டு மறைத்து வைத்திருந்த தக்காளியை சேர்க்கவும் உடன் கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சீரகத்தூள் அரை ஸ்பூன் மிளகுத்தூள் அரை ஸ்பூன் தேவையான அளவு உப்பு இதில் இவை அனைத்தும் உடன் சேர்க்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
- 3
இப்பொழுது மூடி வைத்து ஒரு நிமிடம் அப்படியே வேக விடவும் இதனுடன் 200 கிராம் ஊறவைத்து வேக வைத்துள்ள ரெட் பின்சை சேர்க்கவும்
- 4
பிறகு நன்கு கிளறிவிட்டு மூடி வைத்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும் இப்பொழுது மசாலா எல்லாமாக சேர்த்து வெந்தவுடன் அரை மூடி தேங்காய் அரைத்து வைத்துள்ளதை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 5
இப்பொழுது நன்றாக கலந்து விட்டு ஒரு நிமிடம் கொதிக்க விடவும் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும் இப்பொழுது நாம் செய்த சுவையான ரெட் பீன்ஸ் மசாலா கிரேவி ரெடி இது சப்பாத்தி சாதம் தோசை இதனுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் இப்பொழுது ரெட் பீன்ஸ் மசாலா கிரேவி ரெடி சாப்பிடலாம் வாங்க..
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்