மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)

மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அனைத்து பொருட்களையும் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். காலிபிளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து எடுத்து, உப்பு சேர்த்து சுடுதண்ணீரில் கலந்து அலசி எடுத்துக்கொள்ளவும்.2 மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை அரிந்து கொள்ளவும். அதேபோல் 2 தக்காளியை அரிந்து கொள்ளவும்.. பூண்டு தோலுரித்துக் கொள்ளவும். கசகசாவை லேசாக சூடு செய்து கொள்ளவும். மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடு ஆன பிறகு கடுகு சேர்த்து பொரியவிடவும். 2 பச்சை மிளகாயை வாணலியில் சேர்த்து லேசாக வதக்கி கொள்ளவும். இது செய்வதற்கு முன்பு வெங்காயத்தை உரித்த பூண்டு மற்றும் பொடியாக அரிந்த இஞ்சியை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் அதேபோல தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியவுடன் வெங்காயத்தை சேர்த மூன்று நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி விழுதை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். ஆயில் லேசாக பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 3
இப்போது இதில் மஞ்சள்தூள் வரமிளகாய்த்தூள் உப்பு மற்றும் வர கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு பச்சை வாசம் போகும் வரை கிளறி விடவும். பிறகு சுத்தம் செய்த காலிஃப்ளவரை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 4
இதற்கிடையில் மிக்ஸியில் தேங்காய் துருவல் மற்றும் கசகசா, சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். காய் நன்கு வதங்கியவுடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விடவும். காய் முக்கால் பதத்திற்கு வந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும். காய் முழுக்க நன்கு வெந்துவிடும்.
- 5
பிறகு கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு கொதி விடவும்..பொடியாக அரிந்து வைத்த கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து ரெடி செய்து கொள்ளவும்.
- 6
இப்போது இட்லி மாவை ஒரு டீஸ்பூன் அளவு உள்ள மெசர்மென்ட் ஸ்கூப்பில் எடுத்து, தயாராக எண்ணெய் தடவி வைத்த மினி இட்லி தட்டில் ஊற்றவும். இட்லி பானையில் தண்ணீர் சேர்த்து கொதித்த உடன் இட்லி தட்டுகளை அடுக்கி ஏழு அல்லது எட்டு நிமிடம் வரை போட்டு வேகவிடவும்
- 7
ஒரு நிமிடம் ஆறவிட்டு ஸ்பூனில் தண்ணீர் நனைத்து மெதுவாக இட்லியை உடையாமல் எடுக்கவும். கொஞ்சம் நெய், பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை, கால் வெங்காயம் பொடியாக அரிந்தது எடுத்து வைத்துக் கொள்ளவும். (அலங்கரிக்க)
- 8
பவுலில் சிறிது காலிபிளவர் கிரேவி சேர்த்து அதன் மேல் இட்லியை அடுக்கவும். அதன்மேல் நெய் சிறிது சேர்த்துக் கொள்ளவும். பிறகு காலிபிளவர் உடன் கிரேவியை அதன்மேல் ஊற்றி வெங்காயம் கொத்தமல்லி சேர்த்து அலங்கரித்து ஸ்பூன் வைத்து பரிமாறவும். சுவையான மினி இட்லி கோபி கிரேவி தயார்.
- 9
சூடாக பரிமாறி அனைவரையும் அசத்துங்கள். அனைவருக்கும் மினி இட்லி சாம்பார் போல் இதுவும் பிடிக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாம்பார் நெய் மினி இட்லி (Mini Idli Sambar Recipe in Tamil)
#hotel உணவகத்திற்கு செல்லும் பொழுது என் முதல் தேர்வு மினி இட்லிIlavarasi
-
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.Nithya Sharu
-
மினி சாம்பார் இட்லி (MIni sambar idli recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஹோட்டல் போனதும் கேட்டு வாங்கி சாப்பிடுவது மினி இட்லி சாம்பார் #hotel Sundari Mani -
-
பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி
#காலைஉணவுகள்வழக்கமாக நாம் செய்யும் இட்லிக்கு மாறாக மினி இட்லி செய்து பொடி இட்லியாகவும், சாம்பார் இட்லியாகவும் சுவைத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
வெரைட்டி மினி ஊத்தப்பம் (Verity mini oothappam recipe in tamil)
#familyஎன் குடும்பத்தினருக்கு வெரைட்டியான மினி உத்தப்பம் மிகவும் பிடிக்கும். சட்னி அரைக்காத அல்லது இல்லாத தினங்களில் இதை கொடுத்தால் சாப்பிடுவார்கள். Laxmi Kailash -
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
காலிஃப்ளவர் கிரீமி கிரேவி (Cauliflower creamy Gravy recipe in tamil)
காலிஃப்ளவர் மற்றும் உருளைகிழங்கு, பச்சைப்பட்டாணியுடன் பிரஷ் கிரீம் சேர்த்து செய்த இந்தகிரேவி பார்க்கவும்,சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.#GA4 #Week24 #Cauliflower Renukabala -
தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)
#ed1 இந்த முறை தக்காளி சாதத்தில் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் நான் செய்தேன்.குக்கரில் தண்ணீர் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் போலவே சுவை இருந்தது. தேவை என்றால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது. Meena Ramesh -
பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் punitha ravikumar -
சாம்பார் இட்லி (Sambar idli recipe in tamil)
#GA4 week8 பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
வறுத்து அரைத்த தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசை, பணியாரம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவை அருமையாக இருக்கும். punitha ravikumar -
Mini Bonda|| மினி போண்டா (Mini bonda recipe in tamil)
#ilovecookingமிகவும் எளிதாக செய்ய கூடிய போண்டா. மினி போண்டா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
பிந்தி மசாலா(Bindi masala recipe in tamil)
மிஸ்ஸிங் லெட்டர் லஞ்ச்எங்கள் வீட்டு இன்றைய லஞ்ச ஸ்பெஷல் , சப்பாத்தி, சாதம் ,காய்கறி சாலட், நாட்டுக் காய்கறிகளின் கலவை புளி குழம்பு, மற்றும் தயிர். இந்த வட இந்திய ஹிந்தி மசாலா சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் அதே சமயம் சாதத்தில் பிசைந்து சாப்பிட நம்ம ஊர் காரக் குழம்பு பேஸ்ட் உடன் இருக்கும்.type 2 lunch special Meena Ramesh -
-
-
MTR ready mix rava idli (Rava idli recipe in tamil)
#karnatakaகர்நாடகா என்றாலே MTR ரெஸ்டாரன்ட் ஸ்பெஷல். MTR ஹோட்டலில் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாகவும்,தரமானதாகவும் இருக்கும். மேலும் இவர்கள் மசாலா ஐட்டங்கள் சாம்பார் பொடி, ரெடிமிக்ஸ், இன்ஸ்டன்ட் உணவுகள் போன்றவைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். MTR ரவா மிக்ஸ் இட்லி சூப்பராக இருக்கும். அதை நான் வீட்டிலேயே ரெடிமிக்ஸ் ஆக தயார் செய்து அதில் இட்லி செய்து காட்டியுள்ளேன். அவர்கள் செய்வது preservatives சேர்ப்பதால் நீண்ட நாட்கள் தாங்கும். நம்முடையது 15 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து செய்து கொள்ளலாம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். இன்ஸ்டன்ட் ரவா மிக்ஸ் இட்லி நான் செய்த ரவா இட்லி இருந்தது. Meena Ramesh -
மினி மசாலா இட்லி
இட்லி மாவில் மினி இட்லி தேவையான அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். மசாலாவை ரெடி பண்ணிக் கொள்ள வேண்டும் Soundari Rathinavel -
புதினா ரவா இட்லி(Mint rava idli recipe in tamil)
#ed2 #ravaரவா இட்லி, ப்லைன் ரவா இட்லி, தாளித்த ரவா இட்லி ,வெஜிடபிள் ரவா இட்லி இவை எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது, ஏன் புதினா கொண்டு ரவா இட்லி செய்யக் கூடாது என்று தோன்றியது.முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் சுவையாகவும் அதே சமயம் மிகவும் மிருதுவாகும் இட்லி இருந்தது புதினா வாசத்துடன் சாப்பிடவே சுவையாக இருந்தது. புதினா சேர்த்து இருப்பதால் ஜீரணத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
-
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)
#nutrient2விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது. Meena Ramesh -
தயிர் இட்லி
#இட்லி #bookதயிர் வடை போல் தயிர் இட்லி. தயிர் வடை செய்யும் போது தயிர் இட்லி செய்தால் என்ன என்ற எண்ணத்தில் செய்ய நினைத்தேன். சுவை நன்றாக இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் செய்ய துணிந்தேன். வழக்கமான இட்லி மாவில் எப்போதும் சுடும் இட்லியை இரண்டு மட்டும் எடுத்து, தயிர் வடை செய்வது போல தயிர் பச்சடி தயார் செய்து, வெந்த இட்லியை சூடாக அதில் சேர்த்தேன். என் கணவர் சாப்பிட்டு விட்டு ஏது தயிர் வடை? ஒன்றுதான் கொடுத்தாய் இன்னொன்று இருந்தால் வேண்டும் என்று கேட்டார். அந்த் அளவிற்கு சுவையாக, தயிர் வடை போலவே இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.இட்லி கொஞ்சம் சிறிய அளவில் சுட்டு கொள்ளவும். Meena Ramesh -
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
Aloo channa paneer masala for poori
வழக்கம்போல் சன்னா பூரிக்கு செய்யாமல், சுண்டலுக்கு ஊறவைத்த சன்னா சிறிது மீதம் இருந்தது அதாவது வெள்ளை கொண்டை கடலை இருந்தது .ஒரு உருளைக்கிழங்கு மட்டும் இருந்தது. கொஞ்சம் பன்னீரில் இருந்தது. இவை மூன்றும் கொஞ்சம் கொஞ்சம் இருந்ததால் மூன்றையும் சேர்த்து ஆலு சன்னா பன்னீர் மசாலா பூரிக்கு செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. தமிழ் சென்னா மசாலாவாக இருந்தால் வேகவைத்த கடலையை சிறிது எடுத்து வைத்து மிக்ஸியில் ஒட்டி ஒத்துமைக்கு சேர்த்து செய்வோம். ஆனால் நான் ஒரு உருளைக்கிழங்கை கொண்டைக்கடலை வேக வைக்கும் பொழுதே வேக வைத்து விட்டேன். அதை மசித்து சென்னா கிரேவியில் கலந்து விட்டேன். கொஞ்சமாக இருந்த பன்னீரை தாளிக்கும் கரண்டியில் லேசாக என்னை விட்டு சிவக்க விட்டு அதையும் சன்னா செய்வதில் கலந்து விட்டேன். மூன்றும் சேர்ந்து பூரிக்கு நல்ல ஒரு காம்பினேஷனை கொடுத்தது. Meena Ramesh -
கோபி மஞ்சுரியன் கிரேவி (gopi manjurian gravy recipe in Tamil)
#கிரேவி#goldenapron3 #book#chefdeena Nandu’s Kitchen -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri
More Recipes
கமெண்ட்