வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)

#Cf3 மிகவும் சத்தான காலை டிபனுக்கு ஏற்ற உணவு. இஞ்சி சீரகம் மிளகு கறிவேப்பிலை நெய் சேர்த்து செய்வதால் வயிற்றுக்கு இதமானது .
வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
#Cf3 மிகவும் சத்தான காலை டிபனுக்கு ஏற்ற உணவு. இஞ்சி சீரகம் மிளகு கறிவேப்பிலை நெய் சேர்த்து செய்வதால் வயிற்றுக்கு இதமானது .
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக சிவக்க வாசம் வரை வறுக்கவும். அரிசி பருப்பு இரண்டும் சேர்ந்து கழுவி ஒன்றுக்கு நான்கு பங்கு அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் கொட்டவும். 10 நிமிடம் ஊற விடவும். ஒரு வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகு சீரகம் பொடியாக நறுக்கிய இஞ்சி வறுக்கவும் கருவேப்பிலை சேர்க்கவும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து ஊற வைத்த அரிசி பருப்புடன் சேர்த்து கலந்து விடவும்.
- 2
ஒருகை கரண்டியில் மூன்று ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து அதனுடன் சேர்க்கவும். தேவையான உப்பு, அரை டம்ளர் பால் சேர்த்து கலந்து சிம்மில் வைத்து 5 விசில் விடவும்.பத்து நிமிடம் கழித்து திறந்து நன்கு கலந்துவிடவும் தேவைப்பட்டால் மீண்டும் சிறிதளவு நெய் சேர்க்கலாம். சுவையான கம கம வெண்பொங்கல் தயார்.
- 3
சட்னி சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- 4
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட் (2)