வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#Cf3 மிகவும் சத்தான காலை டிபனுக்கு ஏற்ற உணவு. இஞ்சி சீரகம் மிளகு கறிவேப்பிலை நெய் சேர்த்து செய்வதால் வயிற்றுக்கு இதமானது .

வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)

#Cf3 மிகவும் சத்தான காலை டிபனுக்கு ஏற்ற உணவு. இஞ்சி சீரகம் மிளகு கறிவேப்பிலை நெய் சேர்த்து செய்வதால் வயிற்றுக்கு இதமானது .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1 ஆழாக்கு அரிசி
  2. 3/4 ஆழாக்கு பாசிப்பருப்பு
  3. 1 துண்டு இஞ்சி
  4. 1 ஸ்பூன் சீரகம்
  5. 1 ஸ்பூன் மிளகு
  6. தேவையான உப்பு
  7. 1 கைப்பிடி கருவேப்பிலை
  8. 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  9. 1 ஒருகை பொடித்த முந்திரி
  10. 1 சிறிய கப் நெய்
  11. 3 ஸ்பூன் ஆயில்
  12. 1/2 டம்ளர் பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக சிவக்க வாசம் வரை வறுக்கவும். அரிசி பருப்பு இரண்டும் சேர்ந்து கழுவி ஒன்றுக்கு நான்கு பங்கு அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் கொட்டவும். 10 நிமிடம் ஊற விடவும். ஒரு வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகு சீரகம் பொடியாக நறுக்கிய இஞ்சி வறுக்கவும் கருவேப்பிலை சேர்க்கவும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து ஊற வைத்த அரிசி பருப்புடன் சேர்த்து கலந்து விடவும்.

  2. 2

    ஒருகை கரண்டியில் மூன்று ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து அதனுடன் சேர்க்கவும். தேவையான உப்பு, அரை டம்ளர் பால் சேர்த்து கலந்து சிம்மில் வைத்து 5 விசில் விடவும்.பத்து நிமிடம் கழித்து திறந்து நன்கு கலந்துவிடவும் தேவைப்பட்டால் மீண்டும் சிறிதளவு நெய் சேர்க்கலாம். சுவையான கம கம வெண்பொங்கல் தயார்.

  3. 3

    சட்னி சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

  4. 4
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes