சென்னா மசாலா(Channa masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். இறக்கும் பொழுது அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
- 2
பின்னர் அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் அரைத்து வைத்துள்ள விழுது இதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். நன்கு வதங்கிய பின்னர் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் வேக வைத்து வைத்துள்ள கடலையை அதனுடன் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். சென்னா மசாலா நன்கு கொதிக்கும் பொழுது மீதியுள்ள தேங்காய்த் துருவலை அரைத்து பால் பிழிந்து அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 5
இரண்டு நிமிடம் கொதித்ததும், சப்பாத்தி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொள்ள ஏற்ற சென்னா மசாலா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்