கார்த்திகை ஸ்பெஷல்,*பருப்பு அடை*(paruppu adai recipe in tamil)

கார்த்திகை பண்டிகை அன்று அடை வார்ப்பது என்னுடைய அம்மா வீட்டு பழக்கம்.அதிலும் அடை வார்த்து அதில் 5 ஓட்டைகள் போட்டு வார்ப்பார்கள்.அதே போல் நானும் கார்த்திகைக்கு அடை வார்த்தேன். இதில் 3 வகையான பருப்புகள் சேர்த்து செய்வதால் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் கிடைக்கின்றது.

சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கலரிசி, பருப்புகள், ப.மிளகாய், சி.மிளகாய் அனைத்தையும் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பிறகு தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸி ஜாரில் பருப்பு, கல் உப்பு போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.அரைத்ததை சிறிது தண்ணீர் விட்டுஒரு பாத்திரத்தில் எடுக்கவும்.
- 3
மாவில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலையை பிய்த்து போட்டு கலக்கவும்.பிறகு தவா காய்ந்ததும், எண்ணெய் விட்டு தேய்த்து அடை மாவை ஊற்றவும்.மாவில் 5 ஓட்டைகள் போட்டு எல்லாவற்றிலும் எண்ணெய் விட்டு வெந்து சிவந்ததும், திருப்பி போடவும்.
- 4
பிறகு அடையை தட்டில் எடுக்கவும்.இப்போது, சுடசுட,சத்தான, சுவையான,* பருப்பு அடை* தயார்.இதனை வெல்லத்துடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்