காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)

#CF5 மோர் குழம்பு
Oஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்பு
Oஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸி ஜாரில் 3 ஸ்பூன் கடலைப்பருப்பு, 5 பச்சைமிளகாய் நடுவில் கிறியது, சிறு துண்டு இஞ்சி, அரை ஸ்பூன் சீரகம் இது எல்லாவற்றையும் நன்கு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
அடுத்து கால் லிட்டர் கெட்டித் தயிர், கால் கப் தண்ணீரை மிக்சி ஜாரில் ஊற்றி இரண்டு அல்லது மூன்று சுத்து விட்டு மோராக எடுத்துக் கொள்ளவும்
- 3
அடுத்து ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கால் ஸ்பூன் கடுகு கால் ஸ்பூன் வெந்தயம் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். வெந்தயம் கருகிவிடக்கூடாது
- 4
இருபதிலிருந்து இருபத்தைந்து சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, 4 அல்லது 5 வரமிளகாய் சேர்த்துக் கொள்ளவும். சேர்த்த பிறகு அதில் அரைத்த பேஸ்டை ஊற்றவேண்டும்.
- 5
ஊற்றிய பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் மூடி போட்டு ஒரு கொதி விடவும்.கொதித்த பிறகு அதில் மோரை ஊற்றி கொள்ளவும்.
- 6
மோர் ஊற்றிய பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து லைட்டாக சூடானதும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட்