பருப்பு வடை / மசால் வடை(masal vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இது கடலைப்பருப்பை இரண்டு முறை கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும் 3 மணி நேரம் கழித்து வடிகட்டி 10 நிமிடம் வைக்கவும் பிறகு மிக்ஸியில் இதனை சேர்க்கவும்... இதனுடன் பச்சைமிளகாய் பூண்டு பல் சோம்பு பட்டை 2 லவங்கம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 2
படத்தில் காட்டியவாறு கெட்டியாகவும் கொரகொரப்பாக இருக்க வேண்டும் இதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
கலந்த கலவையை சிறு உருண்டையாக உருட்டி வடை தட்டுவது போல் தட்டையாக தட்டிக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் இவற்றை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 4
வடைகளை பொரித்து எடுக்கும் போது மிதமான தீயில் பொரித்தெடுக்கவும் சூடு சற்று கம்மியாக இருப்பது போல் தோன்றினால் இரண்டு நிமிடம் மட்டும் அதிக தீயில் வைத்து மிதமான தீயில் பொரிக்கவும் அதிக தீயில் வைத்து பொரித்து எடுத்தால் வெளியே வந்து உள்ளே வேகாமல் இருக்கும்
- 5
இது அட்டகாசமான பருப்பு மசால் வடை தயார் இதனை டீ,காபியுடன் ருசியுங்கள்
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட் (6)