பாஸ்மதி ரைஸ் பிளைன் பிரியாணி(basmathi rice plain biryani recipe in tamil)

பாஸ்மதி ரைஸ் பிளைன் பிரியாணி(basmathi rice plain biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்த்து இரண்டு முறை கழுவி நீர் ஊற்றி ஊற விடவும் கடாய்ஆயில் சேர்க்கவும் ஆயில் சூடானவுடன் எடுத்து வைத்துள்ள பட்டை கிராம்பு ஏலம் ஜாவித்ரி அன்னாசிப்பூ இவை அனைத்தையும் சேர்த்து சோம்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பிறகு பல்லாரி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் அதனுடன் மல்லி இலை சேர்க்கவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
- 3
நன்கு கலந்து விடவும் தக்காளியை மிக்ஸியில் முக்கால் பதமாக போட்டு எடுத்து அதையும் சேர்க்கவும்
- 4
அதனுடன் தயிர் சேர்க்கவும் பிறகு மிளகாய்த்தூள் கரம்மசாலா தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
- 5
நன்கு கிளறி தண்ணீர் கொதித்தவுடன் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்
- 6
அதனுடன் மீல் மேக்கர்(மீல்மேக்கரை கொதிக்கவிடவும் பிறகு சூடு ஆறின தண்ணீரில் வடித்துக் கொள்ளவும்) வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு சேர்த்து கிளறி விடவும்
- 7
மூடி வைத்து சிறு தீயில் வேகவிடவும் இடையில் திறந்து உப்பு காரம் பார்த்து புளிப்புச்சுவை தேவைப்பட்டால் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து கிளறிவிடவும் பிறகு மூடி வைத்து ஒரு நிமிடம் அப்படியே தம்மில் வைத்து பரிமாறவும்
- 8
இப்பொழுது சுவையான பிரியாணி சூப்பராக தயாராகிவிட்டது சாப்பிடலாம் வாங்க.
- 9
- 10
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
































கமெண்ட்