ஸ்பைசி வெஜிடேபிள் பிரியாணி (Spicy vegetable biryani recipe in tamil)

ஸ்பைசி வெஜிடேபிள் பிரியாணி (Spicy vegetable biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி செய்ய விருப்பம் போல் காய்களை எடுத்து நறுக்கி தயாராக வைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயம், தக்காளி, புதினா, மல்லி இலையை நறுக்கி வைக்கவும்.
- 3
குக்கரை ஸ்டவ்வில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் முந்திரி சேர்த்து பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், புதினா, மல்லி இலை சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின்பு நறுக்கி வைத்துள்ள காய்கரிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
இரண்டு நிமிடங்கள் வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து கலந்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 7
அதன் பின் தயிர் சேர்த்து கலக்கவும்.
- 8
கொஞ்சம் தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 9
வெஜிடேபிள் சேர்த்து நன்கு கொதிக்க தொடங்கியதும் அரை மணி நேரம் ஊறவைத்த சீராக சாம்பா அரிசியை சேர்க்கவும். எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து மூடவும்.
- 10
குக்கரை மூடிய பின் ஸ்டவ்வில் வைத்து, ஒரு விசில் விட்டு, பின்பு எடுத்து தோசை தவாவின் மேல் பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து விட்டு இறக்கினால் ஸ்பைசி வெஜ் பிரியாணி தயார்.
- 11
தயாரான பிரியாணியை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் சேர்த்து, வெங்காயம், தக்காளி ராய்தாவுடன் பரிமாறவும்.
- 12
இப்போது சத்தான, காரசாரமான வெஜ் பிரியாணி சுவைக்கத்தயார்.
Keywords
Similar Recipes
More Recipes























கமெண்ட் (6)