காளான் மிளகு வறுவல் (Mushroom pepper fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மஸ்ரூம், குடை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சீரகம் தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இவை வதங்கிய பின்னர், மஷ்ரூம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
மஷ்ரூம் உடன் தேவையான அளவு உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மூடி வேகவிடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். மஸ்ரூம் இல் இருந்து தானாகவே தண்ணீர் வரும். புதிதாக பொடி செய்த மிளகு சேர்க்கும்போது சுவை நன்றாக இருக்கும்.
- 4
மஸ்ரூம் முக்கால் பாகம் வெந்தவுடன் குடமிளகாயை சேர்த்து மூடி போட்டு 2 நிமிடம் வேகவிடவும். மஸ்ரூம் இல் இருந்து வெளிவந்த தண்ணீர் வற்றியவுடன், புதிதாக பொடி செய்து வைத்துள்ள மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
- 5
அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வதக்கவும். இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு முறுகலாக வந்தவுடன் இறக்கவும். சுவையான காளான் மிளகு வறுவல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- வாழைப்பூ மிளகு மசாலா வதக்கல் (vazhaipoo milaku masala fry recipe in tamil)
- ஏ பி சி ஜுஸ் (ABC juice recipe in Tamil)
- கத்தரிக்காய் தொக்கு(brinjal thokku recipe in tamil)
- மிளகு காளான் குழம்பு(mushroom pepper curry recipe in tamil)
- வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி(vellai poosanikkai tayir pacchadi recipe in tamil)















கமெண்ட்