ரசம் சாதம் பருப்பு மிளகு பொடி2(paruppu milagu podi recipe in tamil)

#wt1
இது எங்கள் பக்க ஸ்பெஷல் பருப்பு மிளகு பொடி. இந்த பொடியை வெறும் சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் நாங்கள் மாலையில் ஸ்கூல் சென்று வந்தவுடன் இந்த பொடியை சாதத்தில் சேர்த்து ரசம் ஊற்றி பிசைந்து சாப்பிடுவோம். இரவில் அம்மா ஒரு பாத்திரத்தில் பிசைந்து எல்லோருக்கும் கை சாதம் கொடுப்பார்கள் .என்னுடைய தோழி இதில் கலந்து கொள்வாள். அவளுக்கு இந்த பொடி போட்டு ரசம் சாதம் சாப்பிட மிக மிக பிடிக்கும். இன்று அவள் ஈஎன்டி ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறாள்.இன்றும் சந்தித்தால் அந்த கால நினைவு பற்றி பேசுவார். இன்று அவளுக்காக இந்த பொடி அரைத்தேன். இரவில் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மேலும் தெளிவான ரசத்தை தனியாக எடுத்து விட்டு அடி ரசத்தில் சாதத்தில் ஊற்றி இந்தப்பொடி சிறிது சேர்த்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இந்தக் குளிர் காலத்திற்கு சூப்பராக இருக்கும் சாப்பிட. மிளகு தொண்டைக் கமறலுக்கு நல்லது. பருப்பும் கொள்ளும் புரோட்டின் சத்து மிகுந்தது. மேலும் கொள்ளு சேர்ப்பதால் சளி பிடிக்காது. குளிர் காலத்துக்கு ஏற்றது.
ரசம் சாதம் பருப்பு மிளகு பொடி2(paruppu milagu podi recipe in tamil)
#wt1
இது எங்கள் பக்க ஸ்பெஷல் பருப்பு மிளகு பொடி. இந்த பொடியை வெறும் சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் நாங்கள் மாலையில் ஸ்கூல் சென்று வந்தவுடன் இந்த பொடியை சாதத்தில் சேர்த்து ரசம் ஊற்றி பிசைந்து சாப்பிடுவோம். இரவில் அம்மா ஒரு பாத்திரத்தில் பிசைந்து எல்லோருக்கும் கை சாதம் கொடுப்பார்கள் .என்னுடைய தோழி இதில் கலந்து கொள்வாள். அவளுக்கு இந்த பொடி போட்டு ரசம் சாதம் சாப்பிட மிக மிக பிடிக்கும். இன்று அவள் ஈஎன்டி ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறாள்.இன்றும் சந்தித்தால் அந்த கால நினைவு பற்றி பேசுவார். இன்று அவளுக்காக இந்த பொடி அரைத்தேன். இரவில் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மேலும் தெளிவான ரசத்தை தனியாக எடுத்து விட்டு அடி ரசத்தில் சாதத்தில் ஊற்றி இந்தப்பொடி சிறிது சேர்த்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இந்தக் குளிர் காலத்திற்கு சூப்பராக இருக்கும் சாப்பிட. மிளகு தொண்டைக் கமறலுக்கு நல்லது. பருப்பும் கொள்ளும் புரோட்டின் சத்து மிகுந்தது. மேலும் கொள்ளு சேர்ப்பதால் சளி பிடிக்காது. குளிர் காலத்துக்கு ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒண்ணேகால் கப் அளவிற்கு அல்லது ஒரு கப் அளவிற்கு துவரம் பருப்பு எடுத்துக்கொள்ளவும்.கால் கப் மிளகு எடுத்துக் கொள்ளவும். உப்பு சுமார் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். கொள்ளு 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். மிளகு தங்களது தேவைக்கு ஏற்ப சிறிது கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் அளவிற்கு கால் கப் மிளகு சேர்த்தா சிறிது காரமாக (காட்டாக) இருக்கும். அவ்வளவு வாசம் தேவை இல்லை என்றால் 1.25 கப் அளவு துவரம்பருப்பு எடுத்துக் கொள்ளவும். அல்லது மிளகு ஒரு டேபிள்ஸ்பூன் குறைத்துக் கொள்க.
- 2
முதலில் துவரம் பருப்பை நன்கு வாசம் வர நன்றாக சிவக்க வறுத்துக்கொள்ளவும். பிறகு கொள்ளு சிவக்க வறுத்துக்கொள்ளவும். அதன்பிறகு மிளகை வெடிக்கும் அளவிற்கு வறுத்துக்கொள்ளவும்.இது குளிர் காலமென்பதால் உப்பு நமுத்து இருக்கும் உப்பையும் வாணலியில் சேர்த்து சூடு ஏற வறுத்துக் கொள்ளவும். இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எண்ணெய் சேர்க்காமல் வெறும் வாணலில் வறுக்கவும். காலையில் வருத்தீர்கள் என்றால்வெயிலில் சிறிது நேரம் வைத்து காயவிடவும். மாலையில் தயார் செய்தால் தட்டில் கொட்டி சூடு ஆற விட்டு பிறகு அரைக்கவும்.
- 3
இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசாக கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். நன்கு மிளகு வாசத்துடன் இருக்க வேண்டும். உப்பு பார்த்துக் கொள்ளவும். தேவை என்றால் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு பொடி/tuvar dal (Paruppu podi recipe in tamil)
#Ga4இது மிகவும் எளிதில் செய்யக்கூடிய பொடி ஆகும்.இது ரச சாதத்தில் சேர்த்து சாப்பிட கூடிய பொடி.அதுவும் சூடான ரச சாத்தில் சாப்பிடுவதை விட இரவு நேர உணவில் ஆறிய ரச சாதத்திற்கு மிகவும் சூப்பராக இருக்கும்.அதற்காகவே இதை அரைப்போம்.இது என் அம்மா வீட்டு பக்கம் செய்ய படும் பொடி ஆகும்.என் பால்ய தோழிக்கு மிகவும் பிடிக்கும். அவள் ent டாக்டர் ஆக உள்ளாள்.அதனால் எப்பொழுதும் பிஸியாக இருப்பாள். ஃபோன் மூலமும் அவளை பிடிக்க முடியாது. வாட்ஸ்அப் மெஸேஜிக்கும் பதில் அளிக்க மாட்டாள்.மிக மிக நெருக்கமான தோழி தான். அவளை குற்றம் சொல்லவும் முடியாது.வேலை பளு,குழந்தைகள் படிப்பு,கணவருக்கு உதவுவது( கண் மருத்துவர்) என்று இருப்பாள்.அவளுக்கு இந்த பருப்பு பொடி ரச சாதம் மிகவும் பிடிக்கும்.என் வீட்டில் இளமை காலத்தில் என் அம்மா எங்கள் இருவருக்கும் பொடி போட்டு ரசம் ஊற்றி சாதத்தை பிசைந்து உருட்டி கையில் தருவார்.அதனால் அவளுக்கு இந்த சாதத்தை ஃபோட்டோ எடுத்து உனக்கு நினைவு இருக்கிறதா, நாம் இருவரும் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பியவுடன் என் அம்மா கையில் சாப்பிடுவோம் என்று மெசேஜ் செய்தேன். மெசேஜ் பார்த்த உடனே மீனா எனக்கு நினைவில் உள்ளது.இதை சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளது என்று பதில் அளித்து விட்டு உடனே நேரிலும் அழைத்து பேசி விட்டு மன்னிப்பும் கேட்டாள்.இப்போதெல்லாம் எப்போது ப்ரீயாக இருந்தாலும் கூபிட்டு சிறிது நேரம் பேசுவாள்.அப்படி பட்ட சுவையான பொடி ஆகும்.இது ரசம் சாதம் சேர்த்து சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும்.வீட்டில் உள்ள மூன்று பொருட்கள் இருந்தால் போதும்.நான் ரேசன் துவரம் பருப்பில் தான் இதை செய்தேன். Meena Ramesh -
பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்.... Sowmya -
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர். Lathamithra -
சாதம் பருப்பு ப்பொடி(Paruppu podi recipe in tamil)
கடலைப்பருப்பு, து.பருப்பு, பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி ,மிளகாய் வற்றல் 2,மிளகு,1ஸ்பூன்,சீரகம் ஒரு ஸ்பூன் தேவையான அளவு உப்பு ,கறுப்பு உளுந்து,பெருங்காயம்,கறிவேப்பிலை,1கைப்பிடி எண்ணெய் ஊற்றி வறுத்து மிக்ஸியில் பொடி ஆக்கவும். சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். ஒSubbulakshmi -
ரெடி மிக்ஸ் பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
#wt3 பருப்பு வேக வைக்காத நாட்களில் இப் பொடியை புளிக்கரைசலுடன் சேர்த்து மிகவும் சுலபமாக செய்யலாம். சுவையும் வாசமும் கல்யாண ரசம் போலவே.நான் இன்று நான்கு பேருக்கு தகுந்த அளவு பொடி செய்தேன். இதே ரேஷியோவில் அதிக அளவு பொடி செய்து தேவையான பொழுது உபயோகித்துக்கொள்ளலாம். punitha ravikumar -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 #மிளகு ரசம்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த ரசம் வேண்டும், ஒரு வாரமாக மூகடைப்பு, சளி, இருமல். Swim செய்திருக்க கூடாதுஇந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கரிவேப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . எலுமிச்சையில் விட்டமின் C- மூக்கடைப்பு, சளி, இருமல் தடுக்கும் சுவை, சத்து, மணம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
பருப்பு சாத பொடி (Paruppu saatha podi recipe in tamil)
#homeபருப்பு சாத பொடி கடைகளில் கிடைக்கிறது.அதை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.சூடான சாதத்தில் நெய் ஊற்றி பருப்பு பொடியை போட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#onepotஇந்த சீசன்ல இந்த மிளகு சாதம் சாப்பிட்டால் ரொம்பவே நல்லா இருக்கும். Azhagammai Ramanathan -
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 ரசம்.ரசம் சாதத்தில் விட்டு சாப்பிடறத்துக்கும் , அதேபோல் சூப் போல் குடிக்கவும் உதவும் எல்லா சத்துக்கள் நிறந்ததாகவும் இருக்கும்.... Nalini Shankar -
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
தக்காளி போடாமலும் இந்த மாதிரி பருப்பு ரசம் வைத்து பார்த்தீர்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் Joki Dhana -
ரிச் தக்காளி மிளகு ரசம்..(tomato rasam recipe in tamil)
இந்த ரசம் வாய்க்கு ருசியாக இருக்கும்.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் ரசம் வைத்து சாதம் சூடாக பிசைந்து சாப்பிட உடலுக்கு தெம்பு வாய்க்கு ருசி கிடைக்கும். மேலாக டம்ளரில் ஊற்றி சூப் போலவும் குடிக்கலாம். Meena Ramesh -
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#KIDS3#LUNCH BOXகுளிர் காலத்தில் சாப்பிட சிறந்த உணவு A.Padmavathi -
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
#ap*ஆந்திராவில் இருக்கும் பெரும்பாலான ஓட்டல்களில் மற்றும் அனைத்து வீடுகளிலும் சாதத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது இந்த பருப்பு பொடி.*கண்டி பொடி என்று தெலுங்கில் அழைப்பார்கள்.*இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#wt2குளிருக்கு ஏற்ற மிளகு ரசம். மிகவும் சுலபமான, சுவையான செய்முறை. punitha ravikumar -
பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்(paruppu thuvayal and veppam poo rasam recipes in tamil)
#littlechefபருப்பு துவையில் வேப்பம்பூ ரசம் சுவையான காம்போ. அப்பாவிர்க்கு மிகவும் பிடிக்கும். சாதத்தை துவையலில் கலந்து ரசத்தை அதன் மேல் ஊற்றி பிசைந்து, அப்பளம் சேர்த்து சாப்பிட அப்பாவிர்க்கு மிகவும் பிடிக்கும். ரசத்திர்க்கு வேப்பம்பூ, புளி, உலர்ந்த சிகப்பூ மிளகாய் மூன்றும் போதும். கூட தேவையான உப்பு. வேப்பம்பூ, கறிவேப்பிலை இரண்டும் என் தோட்டத்து பொருட்கள். ஒரு தேக்கரண்டி எண்ணையில் கடுகு பெருங்காயம் தாளித்து உலர்ந்த சிகப்பூ மிளகாய், வேப்பம்பூ சேர்த்து வறுத்து புளிதண்ணி சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து ரசம் செய்தேன். வேப்பம்பூ ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி Lakshmi Sridharan Ph D -
குடைமிளகாய் முட்டை மிளகு வறுவல்
குடை மிளகாய் மிளகு முட்டை மூன்றும் சேர்த்து செய்யும் இந்த ரெசிபி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
சேனை குழம்பு(yam curry recipe in tamil)
#ed1சேனை குழம்பு வெங்காய சாம்பார் சுட சாதத்தில் சூடாக ஊற்றி நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
விரத சீரக மிளகு சாதம்(milagu seeraka satham recipe in tamil)
#VTபொதுவாக விரத நாட்களில் வெங்காயம் பூண்டு சேர்க்க மாட்டோம் அதனால் மிளகு சீரகம் சேர்த்து செய்யற சாதம் மிகவும் நன்றாக இருக்கும் மிளகு காரம் வயிற்றுக்கு இதம் Sudharani // OS KITCHEN -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
காரசாரமான மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
#arusuvai2சளி இருமலை போக்கும் மிளகு ரசம். Sahana D -
பொடி ரசம் (Podi Rasam recipe in Tamil)
* இந்த ரசம் ரெடிமேடாக கிடைக்கும் ரச பொடியை வைத்து செய்தது. kavi murali -
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு மிகவும் மருத்துவகுணம் நிறைந்த உணவு .முக்கியமாக இருமல் சளி உள்ளவர்கள் மிளகு ரசம் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையும்.💯✨ RASHMA SALMAN -
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh
More Recipes
கமெண்ட் (2)