காஞ்சிபுரம் இட்லி(kanjeepuram idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்து வெந்தயம் மற்றும் அரிசியை நன்றாக கழுவி நல்ல தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைக்கவும். கோடு இதை தண்ணீர் வடித்து மிக்ஸியில் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை நன்றாக கைகளால் 2,3 நிமிடங்கள் அடித்துக் கொள்ளவும்.
- 2
இரவு முழுக்க மாவை புளிக்க விடவும். புளித்த மாவில் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும் கருவேப்பிலையை ஒன்றும் பாதியுமாக கீரை சேர்த்துக் கொள்ளவும். இதனை நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
பெரிய தண்ணீர் கிளாஸில் அடிப்பாகத்தில் வாழை இலையில் மடித்து வைக்கவும். ஒரு மந்தார இலையை சுற்றி இந்த டம்ளரின் ஓரத்தில் வைத்து பொருத்தவும்.
- 4
இதில் தயார் செய்துள்ள இட்லி மாவை முக்கால் பங்குக்கு ஊற்றவும். ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்த உடன் ஒரு தட்டை வைத்து அதன் மேல் இட்லி மாவு ஊற்றிய கிளாஸ்களை அடுக்கவும். அதன் மேல் வாழை இலையை மூடி இட்லி பாத்திரத்தை மூடி அதிகமான தீயில் 30 நிமிடங்கள் வேக விடவும்.
- 5
வெந்தபின் ஒரு குச்சியை வைத்து நடுவில் குத்தி பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் அடுப்பை அணைத்து 10 நிமிடம் ஆற விட்டு பிறகு இலையிலிருந்து இட்லியை வெளியே எடுத்து கத்தியால் வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
- 6
சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பாரம்பரியமான காஞ்சிபுரம் கோவில் இட்லி மந்தாரை இலை வாசனையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட் (2)