வெஜிடபிள் குருமா(veg kurma recipe in tamil)

வெஜிடபிள் குருமா(veg kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் ஆகிய மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும், வெங்காயத்தை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
தேங்காய் முந்திரிப் பருப்பை விழுதாக அரைத்துக் கொள்ளவும்
- 4
தாளிப்பதற்கு பட்டை கிராம்பு சோம்பு சீரகம் எடுத்துக்கொள் எடுத்துக் கொள்ளவும்
- 5
குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு சோம்பு சீரகம் போட்டு பொரிந்ததும்
- 6
பிறகு நறுக்கிய வெங்காயம் நறுக்கிய காய்கறிகள் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை சேர்க்கவும்
- 7
இஞ்சி பூண்டை தட்டி வைத்து அதையும் சேர்க்கவும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 8
இதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்
- 9
தேவைக்கேற்ப தண்ணீர் உப்பு சேர்த்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்
- 10
சுவையான வெஜிடபிள் குருமா சப்பாத்தி பரோட்டா அத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்