சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் இடித்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 2
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் சுத்தம் செய்து அலசிய சிக்கன் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
பின் சிறிது தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் வரை மூடி வைத்து வேக விடவும்
- 3
பின் மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் கறி மசாலா தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் பச்சை வாசனை போக கொதித்ததும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து இதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 4
எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சுவையான ஆரோக்கியமான சிக்கன் வறுவல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16121620
















கமெண்ட்