சால்னா(salna recipe in tamil)

சால்னா(salna recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
அதன்பின் பெருஞ்சீரகம், சீரகம், கிராம்பு, ஏலக்காய், கசகசா, பட்டை துண்டு, மல்லி மற்றும் தேங்காய்த்துண்டு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
- 3
வதக்கிய கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து வறுத்த கடலையுடன் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் சேர்க்கவும்.
- 5
அதன்பின் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
பின்பு தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும்.
- 8
அதன் பின் உப்பு, அரைத்து வைத்த மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக மிதமான சூட்டில் கிளறி கொதிக்க விடவும்.
- 9
சால்னா நன்கு கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக புரோட்டாவுடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட்