மீன் கறி(fish curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும் மற்றும் ஒரு பெரிய வெங்காயத்துடன் 2 தக்காளி சீரகம் சோம்பு பட்டை சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு வெந்தயம் தாளித்து வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பூண்டை தட்டி சேர்த்துக் கொள்ளவும்
- 4
பின்பு பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி அரைத்து வைத்த விழுதை சேர்த்துக் கொள்ளவும்
- 5
நன்றாக வதங்கியவுடன் மிளகாய் தூள் மல்லி தூள் கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்
- 6
பின்பு தேங்காயுடன் முந்திரி சேர்த்து அரைத்து பால் எடுத்து சேர்த்துக் கொள்ளவும். சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
- 7
கொதித்த உடன் சுத்தம் செய்துள்ள மீன்களை சேர்த்து மூடி வைத்து குழம்பு கெட்டியாகும் வரை சிம்மில் வைத்து கொள்ளவும். சிறிது வெல்லத்தைச் சேர்த்துக் கொள்ளவும்.
- 8
மல்லி இலை தூவி இறக்கவும்.மீன் கறி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்