பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)

சப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
சப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா
சமையல் குறிப்புகள்
- 1
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெண்ணெய் விட்டு வதக்கவும்
- 2
பாதி வதங்கியதும் நறுக்கிய தக்காளி கல் உப்பு சேர்த்து வதக்கவும் சற்று வதங்கியதும் கசகசா சேர்த்து வதக்கவும்
- 3
எல்லாம் சேர்ந்து தக்காளி மசிந்து தொக்கு மாதிரி வந்ததும் இறக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு மிகவும் நைசாக இல்லாமல் அரைத்து எடுக்கவும்
- 4
பனீரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
- 5
பின் நறுக்கிய பனீரை சற்று கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் தண்ணீரில் போட்டு கால் மணி நேரம் வரை ஊறவிடவும்
- 6
பின் வாணலியில் பட்டர் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் 70 சதவீதம் வரை வதங்கினால் போதும் சிவக்க வேண்டாம் பின் அரைத்த மசாலா விழுதை சேர்த்து வதக்கவும்
- 7
மசாலா விழுது சேர்த்து அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கைவிடாமல் 5 நிமிடங்கள் வரை கிளறவும் பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 8
பின் காய்ச்சி ஆறிய பால் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பாலுக்கு பதிலாக ப்ரஷ் க்ரீம் சேர்த்து செய்யலாம் பரவலாக அனைத்து பக்கமும் ப்ரஷ் க்ரீம் கிடைக்காது அதனால திக்கான பால் சேர்த்து செய்யலாம்
- 9
பின் பால் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும் பின் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும் முந்திரி கசகசா இரண்டும் கிரேவியை திக்காக்கும் அதனால் அவ்வப்போது கிளறி கொண்டே இருக்கவும்
- 10
எல்லாம் சேர்ந்து 5 நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் கொதிக்க விடவும் பின் ஊறவைத்த பனீரை குளிர்ந்த நீரில் அலசி வடிகட்டி இதனுடன் சேர்த்து மெதுவாக கலந்து கொள்ளவும்
- 11
பின் மெல்லிய தீயில் 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும் பின் கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 12
எல்லாம் சேர்ந்து 2 நிமிடங்கள் வரை கொதித்ததும் இறக்கி மீதமுள்ள பட்டர் விட்டு கலந்து கொள்ளவும்
- 13
சுவையான ஆரோக்கியமான பனீர் பட்டர் மசாலா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes










































கமெண்ட்