நெய் மணக்கும் வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

காலை உணவிற்கு ஏற்ற ஒரு உணவாகும் .மிகவும் விரைவாக செய்து விடலாம் .அனைவரும் விரும்பி சாப்பிடுவர். எளிதில் செரிமானம் ஆகும். #newyeartamil

நெய் மணக்கும் வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)

காலை உணவிற்கு ஏற்ற ஒரு உணவாகும் .மிகவும் விரைவாக செய்து விடலாம் .அனைவரும் விரும்பி சாப்பிடுவர். எளிதில் செரிமானம் ஆகும். #newyeartamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
நான்கு பேர்
  1. ஒன்றரை டம்ளர்பொன்னி பச்சரிசி
  2. ஒரு சிறிய துண்டுஇஞ்சி
  3. அரை டம்ளர்பாசிப் பருப்பு
  4. ஒரு டீஸ்பூன்சீரகம்
  5. ஒன்றரை டீஸ்பூன்மிளகு
  6. 5 டீஸ்பூன்நெய்
  7. தாளிக்க கருவேப்பிலை
  8. ஒரு கைப்பிடிமுந்திரி
  9. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும்.

  2. 2

    பின்னர் சீரகம் மிளகு ஆகியவற்றை இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் குக்கரில் சேர்த்து வறுக்க வேண்டும்.

  3. 3

    பின்னர் முந்திரியையும் சேர்த்து 2 நிமிடம் வறுக்க வேண்டும்.

  4. 4

    அதன் பின்னர் பச்சரிசி மற்றும் பாசிப் பருப்பு இவற்றை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.அதை குக்கரில் சேர்க்க வேண்டும்

  5. 5

    அரிசி,பாசிப்பருப்பு மொத்தம் சேர்த்து 2 டம்ளர் அதற்கு ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 முதல் 6 விசில் வரும் வரை வேகவிடவும்.

  6. 6

    இப்பொழுது சுவையான நெய் மணக்கும் வெண்பொங்கல் ரெடி. தேங்காய் சட்னி, சாம்பார், உளுந்தவடை உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lathamithra
Lathamithra @lathasenthil
அன்று
Srivilliputhur

Similar Recipes