பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)

இட்லிக்கு இந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும்..
பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
இட்லிக்கு இந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
அதனுடன் கறிவேப்பிலையும் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்றாக வதக்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.. அதில் சிறிதளவு உப்பும் சேர்த்து வதக்கினால் நன்றாக தக்காளி மசிந்து விடும்
- 3
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் அதனுடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
- 4
கொதிக்கும்போது மஞ்சத்தூள் சாம்பார் பொடி சேர்த்து கலந்து நன்றாக கொதிக்க விடவும்
- 5
கொதித்து கெட்டியானதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.. இது இட்லியுடன் தோசையுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்
- 6
இப்போது சூடான சுவையான டிபனுக்கு ஏற்ற பாசிப்பருப்பு இட்லி சாம்பார் தயார்..
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட் (2)