மாசி கருவாடு தொக்கு(maasi karuvadu thokku recipe in tamil)

R Sheriff @rsheriff
மாசி கருவாடு தொக்கு(maasi karuvadu thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அளவு மாசிக்கருவாடு இடி கல்லால் இடித்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். இதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சீரகத் தூள் மல்லித்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 3
பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி மூடி போட்டு சிறு தீயில் தக்காளி மசியும் வரை வதக்கவும்.
- 4
வதங்கியபின் பொடித்து வைத்த கருவாடு கருவேப்பிலை கொத்தமல்லி இலை கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து கலந்து விட்டு மூடி போட்டு சிறு தீயில் 2 நிமிடம் வேகவைத்து அதன் பின் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16294977









கமெண்ட்