பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் .

பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)

ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
5நபர்கள்
  1. 250 கிராம் பன்னீர்
  2. 100 மில்லி க்ரீம் அல்லது திக்கான காய்ச்சிய பால்
  3. 2பெரிய வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 2பச்சை மிளகாய்
  6. 10எண்ணிக்கை முந்திரி
  7. 50கிராம் வெண்ணெய்
  8. 2டீஸ்பூன் ஆயில்
  9. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. 1பட்டை கிராம்பு பிரியாணி இலை
  11. 1டீஸ்பூன் காய்ந்த வெந்தயக்கீரை(கஸ்தூரி மேத்தி)
  12. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் வெண்ணெய் ஒரு டீஸ்பூன் ஆயில் ஊற்றி அதில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் முந்திரி இவைகளை போட்டு நன்றாக வதக்கவும்.

  2. 2

    வதக்கிய வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் இரண்டையும் போட்டு பட்டை கிராம்பு பிரியாணி இலை போட்டு வதக்கி அதனுடன் அரைத்து வைத்த விழுதை ஊற்றவும். அதில் ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் கரம்மசாலா ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  4. 4

    இதனுடன் நமக்குத் தேவையான அளவு கிரீம் அல்லது காய்ச்சிய கெட்டியான பால் ஊற்றி குழம்பு பதத்திற்கு சரி செய்து கொள்ளவும். பின்னர் இதனை மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.

  5. 5

    5 நிமிடங்கள் கொதித்த உடன் அதனுடன் பன்னீர்துண்டுகள் சேர்த்து அதனுடன் காய்ந்த வெந்தயக் கீரையை சேர்த்து உப்பு சரிபார்த்து மீண்டும் தேவை என்றால் கெட்டியான பால் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு பரிமாறவும்.

  6. 6
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rithu Home
Rithu Home @rithuhomemohana
அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

Similar Recipes