சன்னா மசாலா(channa masala recipe in tamil)

சன்னா மசாலா(channa masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய கொண்டைக்கடலையை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும் இதோடு உப்பு மஞ்சள் தூள் இட்லி சோடா சேர்க்கவும். குக்கரை மூடி அடுப்பில் வைத்து ஆறு விசில் வேக வைக்கவும்.
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் கால் கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மசாலா வாசனை போக வதக்கவும்.
- 3
பின் இதில் காஷ்மீரி மிளகாய் தூள் சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். மீண்டும் அரைக்கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலக்கவும். சிறு தீயில் இதனை மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.
- 4
அதன் பின் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். தயிர் சேர்த்த பின் கலவை கொதித்து வரும் நேரத்தில் வேகவைத்து கொண்டே கடலையை தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
- 5
தீயை மிதமாக வைத்து நன்றாக மசாலாவை கொதிக்க வைக்கவும். கடைசியாக கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும். சுவையான சன்னா மசாலா சப்பாத்தி பூரியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes








கமெண்ட்