பச்சை பயிறு கிரேவி(green gram gravy recipe in tamil)

#HF
பச்சை பயிறு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டது.தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.என் வீட்டில்,இதை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடாதவர்கள் கூட, கிரேவி விரும்பி சாப்பிட்டனர்.
பச்சை பயிறு கிரேவி(green gram gravy recipe in tamil)
#HF
பச்சை பயிறு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டது.தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.என் வீட்டில்,இதை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடாதவர்கள் கூட, கிரேவி விரும்பி சாப்பிட்டனர்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
வெறும் கடாயில் பச்சைப்பயறு சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
- 3
பின் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு பிரியாணி இலை மற்றும் சீரகம் தாளித்து, பொடிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி பின்,தக்களின்விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
வதங்கியதும்,குழம்பு மிளகாய் தூள்,காஷ்மீரி மிளகாய் தூள்,கரம் மசாலத்தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 6
பின் வறுத்த பச்சை பயிறு சேர்த்து கலந்து விடவும்.பின் 400ml அளவு (தேவையான அளவு) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
கொதித்ததும் உப்பு சரி பார்த்து,குக்கர் மூடி போட்டு 5 விசில் விடவும்.
பயிறு ஊற வைக்க வில்லை என்பதால்,5-7விசில் வரையிலும் விடலாம்.
- 8
ஆவி அடங்கியதும் திறந்து,கரண்டியால் கலந்தால்,நன்கு மசிந்து விடும்.அதிகம் மசிக்க வேண்டாம்.கடைசியாக மல்லி தழை தூவி பரிமாறலாம்.
- 9
அவ்வளவுதான். சுவையான, ஆரக்கியமான,பச்சை பயிறு கிரேவி ரெடி.
இது சப்பதிக்கு மிகச் சிறப்பாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (10)