கட்டோரி சென்னா சாட்(katori channa chat recipe in tamil)

கட்டோரி சென்னா சாட்(katori channa chat recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, கான்பிளவர், உப்பு, 2ஸ்பூன் பட்டர் சீரகம் சேர்த்து கலக்கவும் பிறகு அதில் தண்ணீர் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 2
பிறகு மிக்ஸியில் 4 பச்சை மிளகாய்,1 துண்டு இஞ்சி,1 கைப்பிடி கொத்தமல்லி,புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 3
பிறகு ஊறிய மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து ஒரு கிண்ணத்தின் பின்பகுதியில் வைத்த அழுத்தி வைக்கவும்
- 4
பிறகு அழுத்தி வைத்துள்ள மாவை எண்ணெயில் போடவும் பிறகு பொரிந்ததும் கிண்ணத்தை தனியாக எடுக்கவும் பிறகு கட்டோரி இரண்டு பக்கமும் பொரிந்ததும் எடுக்கவும்
- 5
பிறகு ஒரு தட்டில் பொறித்த கட்டோரியை வைக்கவும்
- 6
பிறகு அந்த கட்டோரில் வேகவைத்த சுண்டல், துருவிய கேரட், நறுக்கிய முட்டைக்கோஸ், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, சாட் மசாலாவை மேலே தூவி விடவும், கிரீன் சட்னி சேர்க்கவும்
- 7
பிறகு மீண்டும் அதில் கேரட், முட்டைக்கோஸ், தக்காளி, சாட் மசாலா,மிச்சர், கிரீன் சட்னி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்
- 8
இப்பொழுது சுவையான கட்டோரி சென்னா சாட் தயார்
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட் (2)