வெந்தயக்கீரை மொச்சை கத்திரிக்காய் குழம்பு(mocchai kulambu recipe in tamil)
Rani N @Nagarani
வெந்தயக்கீரை மொச்சை கத்திரிக்காய் குழம்பு(mocchai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும். கூடவே இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பச்சை மொச்சை அதற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கி கூடவே உருளைக்கிழங்கு நறுக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு காய் என்பது சதவீதம் வேக விடவும்.
- 2
மொச்சைக்காய் முக்கால் பதம் வெந்தபின் வெந்தயக்கீரை மற்றும் கத்தரிக்காய் நறுக்கி சேர்த்து கரம் மசாலா தூள் சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் சிறு தீயில் வேக விடவும். குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 3
கடைசியாக தேங்காய் தக்காளியை நைசாக அரைத்து குழம்பில் ஊற்றி உப்பு சரி பார்த்து நன்றாக கொதித்த பின் அடுப்பை நிறுத்தவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16551671









கமெண்ட்