சீரக சம்பா புலாவ்(seeraga samba pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் கல்பாசி இவை அனைத்தையும் சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்
- 2
சீரக சம்பா அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்
- 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்
- 5
இவை அனைத்தும் வதங்கியதும் தண்ணீர் தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வரும் வரை கொதிக்க விடவும்
- 6
தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை வடிகட்டி கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்
- 7
ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அரை தீயில் வைத்து அரிசியை வேகவிடவும்
- 8
அரிசி வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும் இப்போது சீரக சம்பா புலாவ் தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16564196
















கமெண்ட்