கொரியன் வெஜ் பான் கேக்(korean veg pancake recipe in tamil)

parvathi b @cook_0606
கொரியாவில் இதனை ஜோன் என்று அழைப்பார்கள். பல விதமான வகைகளும் இதில் உள்ளது.
கொரியன் வெஜ் பான் கேக்(korean veg pancake recipe in tamil)
கொரியாவில் இதனை ஜோன் என்று அழைப்பார்கள். பல விதமான வகைகளும் இதில் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகோஸ், வெங்காயம், குடைமிளகாய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
- 2
அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய் தூள், உப்பு, கோதுமை மாவு சேர்த்து பிரட்டி கொள்ளவும்
- 3
தண்ணீர் சேர்த்து பிசறி கொள்ளவும். அடியில் மாவுடன் தண்ணீர் இருக்கும் வாறு செய்ய வேண்டும்
- 4
தோசை கல்லில் பிசறிய காய்கறியை வட்டமாக எடுத்து வைக்கவும். இடையே உள்ள gap களில் அடியில் தண்ணீருடன் இருக்கும் எடுத்து சேர்த்து ஒன்று சேர்க்கவும். எப்படி செய்வதில் காய்கறிகள் பிரியாது. சப்பாத்தி போல் திருப்ப வரும்
- 5
இப்போது எண்ணெய் சேர்த்து மாவு வெந்தவுடன் திருப்பி போட்டு பரிமாறவும்
- 6
மாலை நேர ஸ்நாக்ஸ் போல உண்ணலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16641612










கமெண்ட்