சேப்பங்கிழங்கு பொரியல்(seppankilangu poriyal recipe in tamil)

சேப்பங்கிழங்கை கல்யாண வீடுகளில் மிகவும் ருசியாக செய்வார்கள் அதைப்போல நாமும் செய்யலாம் மிக மிக ருசியாக இருக்கும். #kp
சேப்பங்கிழங்கு பொரியல்(seppankilangu poriyal recipe in tamil)
சேப்பங்கிழங்கை கல்யாண வீடுகளில் மிகவும் ருசியாக செய்வார்கள் அதைப்போல நாமும் செய்யலாம் மிக மிக ருசியாக இருக்கும். #kp
சமையல் குறிப்புகள்
- 1
சேப்பங்கிழங்கை நன்றாக கழுவி குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து ஆரியதும் தோலை உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எடுத்து வைக்கவும்
- 2
நறுக்கி வைத்துள்ள கிழங்குகளை எண்ணெயை காய வைத்து சிறிது சிறிதாகபோட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 3
இப்பொழுது தேங்காய் சீரகம் சோம்பு பூண்டு இவற்றை கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 4
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும் பச்சை வாசனை நீங்கியதும் மிளகாய்த்தூள் உப்பு அதில் சேர்த்து கிளறவும்
- 5
ஒரு நிமிடம் கிளறியதும் மூன்று ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்க்கவும் தண்ணீர் சேர்ப்பதனால் கிழங்குடன் இந்த மசாலா சேர்ந்து இருக்கும்இப்போது பொறித்து வைத்திருக்கும் சேப்பங்கிழங்கை இந்த மசாலா கலவையில் சேர்க்கவும்
- 6
மிகவும் சுலபமான முறையில் சேப்பங்கிழங்கு பொரியல் கல்யாண வீடுகளில் செய்வது போல ருசிப்பதற்கு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
- மசாலா பாகற்காய் பொரியல்(masala bittergourd poriyal recipe in tamil)
- சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
- கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil)
- *கத்தரிக்காய், மூங்தால், கொத்சு*(கூட்டு)(brinjal kotsu recipe in tamil)












கமெண்ட்