மசாலா பாகற்காய் பொரியல்(masala bittergourd poriyal recipe in tamil)

பெரிய பாகற்காயை வைத்து மிக ருசியான ஒரு பொரியல் கசப்பு இனிப்பு உப்பு காரம் சிறிதளவு புளிப்பு எல்லாம் சேர்ந்து செய்து பார்ப்போம் வாருங்கள் அருமையான ருசியுடன் நன்றாக இருக்கும்#kp

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய பாகற்காயை வட்ட வடிவமாக நறுக்கி நடுவில் உள்ள விதைகளை எடுத்து சுத்தம் செய்து வைக்கவும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் மற்றும் வெங்காயம் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள பாகற்காயைஉப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக விடவும்
- 3
எந்த பாகற்காயை தண்ணீரை வடித்து விட்டு தனியே வைத்துக் கொள்ளவும் இன்னொரு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு பொரிந்த விட்டு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும்
- 4
வெங்காயம் தக்காளி கலவையை நன்கு கிளறிவிட்டு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்க்கவும்உப்பு சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்
- 5
கிளறிய பின் பாகற்காயை அதில் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும் ஐந்து நிமிடங்கள் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்
- 6
இப்பொழுது சாம்பார் சாதம் தயிர் சாதம் எல்லா சாத வகைகளுடன் சாப்பிட அருமையான மசாலா பாகற்காய் பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்