நெய் சோறு(ghee rice recipe in tamil)
Selvapriya @Spriya
நெய் சோறு(ghee rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி எடுக்கவும். ஒரு குக்கர் ஸ்டவ்வில் வைத்து நெய் ஊற்றி லேசாக சூடேறியதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- 2
இது எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி புதினாவில் பாதி அளவு நறுக்கி சேர்த்து கூடவே தக்காளியையும் பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து நிறம் மாறாத படி லேசாக வதக்க வேண்டும்.
- 3
பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து குக்கரில் சேர்க்கவும் இதோடு தண்ணீர் மற்றும் தேவைக்கேற்ப உப்பு மீதமுள்ள மல்லி புதினா இலைகளை தூவி குக்கரில் மூடி விசில் போட்டு ஒரு விசில் வந்த பின் சிறு தீயில் ஏழு நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் சூப்பரான நெய் சோறு தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16705631








கமெண்ட்