*மில்லட் லட்டு*(எனது 475 வது ரெசிபி)(millet laddu recipe in tamil)

#MT
சிறுதானியங்கள் சிறுநீரைப் பெருக்கும். உடலில் உள்ள உப்பைக் கரைக்கும். கண் குறைபாடுகளை குறைக்க பெரிதும் உதவுகிறது.
*மில்லட் லட்டு*(எனது 475 வது ரெசிபி)(millet laddu recipe in tamil)
#MT
சிறுதானியங்கள் சிறுநீரைப் பெருக்கும். உடலில் உள்ள உப்பைக் கரைக்கும். கண் குறைபாடுகளை குறைக்க பெரிதும் உதவுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து வெறும் கடாயில் மாவை போட்டு வாசனை வரும்வரை நன்கு வறுக்கவும்.
- 3
வறுத்ததை பௌலில் போடவும்.
- 4
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
- 5
வறுத்த முந்திரி, ஏலத்தூளை பௌலில் மாவுடன் சேர்க்கவும்.
- 6
கடாயில், நாட்டுச் சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து, நன்கு கொதித்து கரைந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 7
பிறகு வெல்லக் கரைசலை வடிகட்டவும்.
- 8
மாவில் வெல்லக் கரைசலை சிறிது சிறிதாக ஊற்றவும்.
- 9
அனைத்தையும் ஒன்று சேர கலந்து உருக்கிய நெய்யை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.
- 10
பிறகு உருண்டைகளாக உருட்டி மேலே வறுத்த முந்திரியை வைத்து அலங்கரிக்கவும்.
- 11
இப்போது, சத்தான, சுவையான, சுலபமான,*மில்லட் லட்டு*தயார். செய்து பார்த்து அசத்தி, சாப்பிட்டு, என்ஜாய் செய்யவும்.
- 12
குறிப்பு:- இந்த லட்டில் சர்க்கரைக்கு பதில், நாட்டுச் சர்க்கரை சேர்ப்பதால், கூடுதல் சுவையும், ஆரோக்கியமும், கிடைக்கின்றது.
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட் (6)