முட்டை மசாலா

Mehu's Kitchen
Mehu's Kitchen @cook_16520143
Salem
Edit recipe
See report
Share
Share

Ingredients

  1. முட்டையை வேக வைக்க:
  2. முட்டை-5
  3. தேவையான அளவு தண்ணீர்
  4. முட்டை மசாலாவிற்கு:
  5. வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
  6. எண்ணெய்-1 டேபிள்ஸ்பூன்
  7. காஷ்மீரி மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  9. பட்டை-2 இன்ச் அளவிற்கு
  10. வர மிளகாய்-2
  11. பிரியாணி இலை-1
  12. சீரகம்-1 டீஸ்பூன்
  13. வெங்காயம்-1
  14. இஞ்சி பூண்டு விழுது-2 டேபிள்ஸ்பூன்
  15. கசூரி மேத்தி-2 டேபிள்ஸ்பூன்
  16. கொத்தமல்லி தலை-1/2 கப்
  17. தக்காளி-2
  18. மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்
  19. மல்லித்தூள்-1/2 டீஸ்பூன்
  20. கரம் மசாலா-1 டீஸ்பூன்
  21. தேவையான அளவு
  22. தண்ணீர்- 1 1/2 கப்
  23. அமுல் ஃப்ரெஷ் கிரீம்-2 டேபிள்ஸ்பூன்

Cooking Instructions

  1. 1

    முட்டையை வேக வைத்து தோலுரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் வெண்ணெய், எண்ணெய் ஊற்றவும். என்னை சூடாகியதும் காஷ்மீரி ரெட் சிலி பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து மிதமான சூட்டில் இரண்டு நிமிடத்திற்கு அமைத்துக் கொள்ளவும்.பிறகு வேகவைத்த முட்டைகளை இதில் சேர்த்து 2 அல்லது 3 நிமிடத்திற்கு நன்று சமைத்த பின் முட்டையை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அதே கடாயில் பட்டை, வரமிளகாய், பிரியாணி இலை, சீரகம்,சேர்க்கவும். சீரகம் வெடித்து வந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் இதை வதங்க விடவும். அடுத்து கசூரி மேத்தி கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறிவிட்டு சின்ன சின்னதாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    தக்காளி வெந்ததும் மிளகாய்த்தூள்,மல்லித்தூள் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து இதை ஒரு ஐந்து நிமிடத்திற்கு மூடி போட்டு வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    அடுத்து தண்ணீர் மற்றும் அமுல் பிரஷ் கிரீம் சேர்த்து கிளறிவிட்டு கொதி வரும்வரை இதை மூடிவைக்கவும். மசாலா கொதிக்க ஆரம்பித்ததும் முட்டைகளை இதில் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடம் வரை சமைத்து கொள்ளவும். இறுதியாக கொத்தமல்லித் தழையை தூவி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

  7. 7

    சுவையான முட்டை மசாலா ரெடி!

  8. 8

    இந்த முட்டை மசாலாவை சப்பாத்தி, பரோட்டா, பூரிக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mehu's Kitchen
Mehu's Kitchen @cook_16520143
on
Salem
Paradise on your plate!
Read more

Comments

Similar Recipes